முள்கிரீடம்

ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள்: ஒரு கள ஆய்வு அ. பகத்சிங் இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது இந்துக்கள் நடத்தும் ஆதிக்கமே இந்த குடியரசாக உள்ளது. ரூ.100/-

பாலஸ்தீன்

எட்வர்ட் செய்த் தமிழில்: எஸ். அர்ஷியா ஒவ்வொரு இஸ்ரேலிய அதிகாரியும் திட்டமிட்டு, முறையாக, ஒழுங்குபடுத்தப்பட்ட ஷரோனிய ஆவியாக மாறியிருக்கின்றனர். குறிகொண்டு, திட்டநோக்குடைய கருதுதலுடன், உளமார்ந்த உணர்வுப் போக்கில், நிதானித்த முறையில், அவர்கள் பாலஸ்தீனிய மக்களை அணுகுகின்றனர். தற்கொலைப்படை என்பது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் அது, குறைகூற முடியாத அளவுக்கு நேரடியானதாக இருக்கின்றது. பல்லாண்டுகளாக, நெறியற்ற வழியில் நடத்தப்படுவதாலும், அதிகாரமின்மையாலும், நம்பிக்கையிழப்பின் மனக்கசப்பான முடிவினாலும், உளப்பூர்வமான வகையில் உருப்பெற்றத் திட்டமாக அது இருக்கின்றது என்பது, எனது கருத்து. ரூ.60

சிறிய​தே அழகு​

ஆசிரியர்தமிழில் :யூசுப்ராசா இரண்டாம் உலகப்போருக்கப் பின் வெளிவந்த சிறந்த பொருளாதார நிபுனர்களிடம் செல்வாக்குப் செலுத்திய 100 நூல்களில் ஒன்றென டைம்ஸ் பத்திரிக்கையால் கொணடாடப்பட்ட ஐரோப்பாவின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்றான Prix europeen de lissal Charles Vellon விருதை வென்ற ஆங்கில பொருளாதார நிபுனரின் சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல், மனிதனுக்கு என்ன வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவனது குறைபாடுகள் என்ன? அவற்றைச் சரி செய்ய வேண்டியதன் தேவை என்ன? அவற்றை எப்படி செய்வது? முழு உலகிற்குமான நற்பலன் கிடைக்க எந்த வகையான தொழிற் செயல்பாடுகள் சரியானவை? அளவில் சிறிய மனிதனுக்கு சிறியவைகளே அழகானவை, உள்ளதே போதும் என்ற மனநிலை எவ்வளவு நன்மையானது? தனி உடைமைத்துவம், மனித இனத்தை எப்படிச் சுரண்டி சீரழிக்கிறது? அனைத்தும் பொதுவதவதால் விளையும் நன்மைகள் மனித குலத்தை எந்த அளவுக்கு வாழ்விக்கும? எல்லாவற்றுக்கும் விடைதேடி அலசி ஆராய்கிறார் பேரா.இ.எப். சுமாஸர் ரூ.180

சாதி அரசியல் அதிகாரம்

கௌதம சித்தார்த்தன் தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன. இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல். ரூ.100/-

சச்சார் குழு அறிக்​கை

ஆசிரியர்: அ. மார்க்ஸ் சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டுமே கவனம் குவித்து அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ச்ச்சார் குழுவின் ஆய்வு முறை சேகரித்துள்ள முக்கியப் பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள். அட்டவனைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல். ரூ.70/-

குர்து தேசிய இனப் போராட்டம்

எச். பீர்முஹம்மது குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துக்கள் தான்.இவர்களின் தாயகம் குர்திஸ்தான். இவ்வினத்தை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் தான் இந்த நூல். ரூ.200/-

காந்தியை கொன்றவர்கள்

மனோகர் மல்கோங்கர் தமிழில் : க.பூர்ணசந்திரன் நாதுராம் விநாயக் கோட்ஸே, 1910 மே 19 அன்று ஒரு சநாதன பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே மூன்று பிள்ளைகள் இறந்துவிட்டதால் அவருடைய பெற்றோர்கள், தீயசக்திகளுக்குப் பரிகாரம் செய்விக்க, அடுத்த மகனைப் பெண்ணைப்போல வளர்ப்பதென்று முடிவுசெய்தனர். அதனால் அவர் மூக்குப் பொட்டு (நாது£, தமிழில் நத்து) அணிந்து வளர்ந்தார். ஆகவே நாதுராம் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. அக்கம்பக்கத்தவர்க்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர். ரூ.300/-

கருத்து சுதந்திரத்தின் அரசியல்

கௌதம சித்தார்த்தன் இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும்மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனியஅரசியல் நிலைபாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில்வைத்துப் பேசுவதில்லை . இதற்குப் பின்னால் உள்ளநுண்ணரசியல் செயல்பாடுகள்தான் கலை, அழகியல் என்கிறபெயர்களிலும் தீவிரமான, தரமான, சிறந்த எழுத்து என்கிறபெயர்களிலும் விருதுகளாக வழங்கப்படுகின்றன. ரூ.130

இந்தியா எதை நோக்கி?

ராமச்சந்திர குஹா/லீனாகீதா ரெகுநாத்/தினேஷ் நாராயணன் /வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன்  தொகுப்பும் மொழியாக்கமும் :  செ.நடேசன் சங்பரிவாரங்களின் சகிப்பின்மை   நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது .கருத்துரிமை, பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார். இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது ‘அரசியல் பின்னணி’ என ஏகடியம் செய்யப்படுகின்றனர். இந்த அநாகரிகர்களுக்கெதிராக, நமது நாட்டின் பன்முகத்தன்மையை, மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொண்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது. அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல்  ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இதனை வெளியிடுகிறோம். ரூ.150

ஆயுத வியாபாரத்தின் அரசியல்

கௌதம சித்தார்த்தன் “நாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும்,அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமா?ஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில்மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு நீட்சிபெற்றுவிட்டமிக சமீபத்திய, சாமர்த்தியமான, மிக அபாயகரமான தொழில்நுட்பங்கள். ஏறத்தாழ தாமாகவே இலக்குகளைத் தேடிக்கண்டடைந்து கொள்ளும் திறனாற்றல் பெற்றவை இவ்வாயுதங்கள். இதுவெல்லாம் யாருக்கு? ரூ.90