சிறகுக்குள் வானம்

ஆர்.பாலகிருஷ்ணன் இருட்டு வணிகர்கள் ஏதேனும் சொல்லட்டும். வெளியே உலகம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது. நிறைவும் குறைவும் நெஞ்சில் இருக்கிறது. எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ அதுவே மகிழ்ச்சியளிக்கிறது ரூ.125/-

தமிழுணர்வின் வரைபடம்

தமிழவன் வேறெந்தக் காலத்தையும்விட தமிழ் என்ற அடையாளமும் உணர்வும் இன்று மிகவும் சிக்கலாகிவிட்டது. இந்தச் சிக்கலை வரலாற்று ரீதியாகவும் அரசியல், பண்பாட்டு ரீதியாகவும் இந்தக் கட்டுரைகளில் எதிர்கொள்கிறார் தமிழவன். தமிழர்கள் உலகெங்கும் எதிர்கொள்ளும் அக-புற நெருக்கடிகளை தத்துவார்த்த நோக்கில் விவாதிக்கும் இந்த நூல் மிகப் பொருத்தமான ஒரு காலகட்டத்தில் வெளிவருகிறது. ரூ.90/-

இன்னும் மிச்சமிருக்கும் இருள்

மாயா மாயாவின் சமூக அரசியல் பார்வைகள் சமகாலத்தின் உரத்த சாட்சியங்களாக ஒலிக்கின்றன. நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்மைகள் குறித்தும் தீமைகள் குறித்தும் உரத்த குரலில் பேசும் இக்கட்டுரைகள் ஆழமான பார்வைகளுடனும் தெளிவான நடையுடனும் எழுதப்பட்டுள்ளன. ரூ.70/-

சினிமாவின் மூன்று முகங்கள்

சுதேசமித்திரன் சினிமா மூன்று முதன்மை வகைமைகளில் பிரிக்கப்படலாம். அவை, 1. கமர்ஷியல் சினிமா 2. யதார்த்த சினிமா 3. பாரலல் சினிமா இந்த மூன்றில் எது சரியானது எது பிழையானது என்று ஆராய்வது அவசியமற்றது. ஏனென்றால் இம்மூன்றின் தேவையுமே இன்றியமையாததுதான். இந்த மூன்றுமே ஒன்றோடு ஒன்று சளைத்தவை அல்ல. ஆகவே மூன்றிலும் நம் கண்களில் தென்படும் படங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இவை மூன்றுமில்லாமல் வேறொரு கொடுமைகூட இருக்கிறது அதற்கு இரண்டு பெயர்கள் உண்டு. ஒன்று மசாலா சினிமா மற்றது இந்திய சினிமா! ரூ.90/-

இடம்-காலம்-சொல்

இந்திரஜித் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் சமூக கலாச்சார அரசியல் அடையாளங்களை விமர்சன நோக்கில் விவாதிப்பவை இந்திரஜித்தின் கட்டுரைகள். பல்வேறு சமூக-தனிமனிதப் பாசாங்குகளை இந்திரஜித் தந்து, அங்கதப் பார்வையின் மூலம் இரக்கமின்றிக் கலைத்துவிடுகிறார். உட்பொருளும் மௌனங்களும் நிறைந்த இந்திரஜித்தின் பாய்ந்துசெல்லும் எழுத்துமுறை இவரை மிகமுக்கியமான நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக நிறுவுகிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் ஒரு சமூகத்தின் அரசியல்-பண்பாட்டு உளவியலை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான பல்வேறு திறப்புகளைத் தருகிறது. ரூ.90/-

போக்கிரி தேசம்

மி.ராஜீ நாம் வாழும் உலகின் மாபெரும் யுத்தக் குற்றவாளியாகவும் பொருளாதாரக் குற்றவாளியாகவும் திகழும் அமெரிக்கா குறித்த விமர்சன நோக்கிலான ஒரு சித்திரத்தை அளிக்கிறது ராஜுவின் இந்த நூல். அமெரிக்க எதிர்ப்புணர்வு ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல மாறாக அது உலக மக்களின் தார்மீக வாழ்வுரிமைப் பிரச்சினை என்பதை இந்த நூல் அழுத்தமாக முன் வைக்கிறது. ரூ.85/-

சூலகம்:பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம்

ரவிக்குமார் இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விவாதிக்கும் இக்கட்டுரைகள் மானுடத்தின் மறுபாதியை தின்னும் அநீதியின் இருளை சுட்டிக்காட்டுகின்றன. சமூக கலாச்சார வாழ்வின் பல்வேறு தளங்களில் பெண்களின் மீது நிகழும் குரூரமான வன்முறைகளையும் புறக்கணிப்புகளையும் பற்றிய கவனத்தை ரவிக்குமார் இக்கட்டுரைகளின் வழியே பரந்துபட்ட தளத்தில் உருவாக்குகிறார். பெண்ணிய கோட்பாடுகளை தமிழில் உருவாக்குவதிலும் பெண்ணிய எழுத்துக்களை தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வந்திருக்கும் இவர் இத்தொகுப்பின் வழியே சமகாலப் பெண்களின் துயரங்களுக்கு சாட்சியம் அளிக்கிறார் ரூ.75/-

சாட்சி மொழி: சில அரசியல் குறிப்புகள்

ஜெயமோகன் நாம் எப்போதும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம், ஓயாமல் விவாதிக்கிறோம். ஏனென்றால் அது நம்முடைய நிகழ்காலத்தின், எதிர்காலத்தின் மீதான விவாதம். இந்த விவாதங்களில் எத்தனையோ தரப்புகள் உண்டு. கட்சித்தரப்புகள். கோட்பாட்டின் தரப்புகள். அவற்றில் ஒன்று எழுத்தாளனின் தரப்பு. எழுத்தாளனின் தரப்பு என்பது கட்சி மற்றும் கோட்பாடுகளைச் சார்ந்ததாக இருக்க முடியாது. எந்த நுண்ணுணர்வால் அவன் இலக்கியங்களைப் படைக்கிறானோ அந்த நுண்ணுணர்வால் அவன் சமகால அரசியலை அணுகும்போது உருவாகும் கருத்துக்களால் ஆனது அது. ஒரு நாவலை எழுதும் அதே ஆராய்ச்சியுடன் முழுமை நோக்குடன் அவன் வரலாற்றையும் அரசியலையும் பார்ப்பான் என்றால் அவன் குரலை எவரும் புறக்கணித்துவிட முடியாது சமகால அரசியல் குறித்த எண்ணங்களும் எதிர்வினைகளும் பதிவுகளும் கொண்ட நூல் இது ரூ.160/-

இன்று பெற்றவை:எழுத்தாளனின் நாட்குறிப்புகள்

ஜெயமோகன் எந்த ஒரு நாட்குறிப்பும் ஆர்வமூட்டுவதே. அதில் ஓரு மனிதனின் வாழ்க்கை உள்ளது. எழுத்தாளனின் நாட்குறிப்பு என்பது ஒரு பண்பாடு தன் நாட்குறிப்பை எழுதுவதுபோல. கடந்த சிலவருடங்களில் ஜெயமோகன் பண்பாட்டு அரசியல் மற்றும் இலக்கிய விவாதங்களைப் பற்றி எழுதிய சிறிய குறிப்புகளின் நாள்வழி அமைப்பு இந்நூல். இங்கே என்ன பேசப்பட்டது என்பதற்கும் என்ன பேசப்படவில்லை என்பதற்கும் சான்று இது. நுண்ணிய அவதானிப்புகளும் எதிர்வினைகளும் அடங்கியது. ரூ.150/-

புல்வெளி தேசம்:ஆஸ்திரேலியப் பயணம்

ஜெயமோகன் ஆஸ்திரேலியா இயற்கை சில பரிசோதனைகள் நிகழ்த்துவதற்காக ஒதுக்கு புறமாக கொண்டு வைத்த ஒரு நிலம். அங்கே விசித்திரமான மிருகங்கள் வேறுபட்ட செடிகொடிகள் உள்ளன. அந்நிலத்து மனிதர்கள் வெளியுலகம் அறியாமல் தங்கள் வாழ்க்கையை நடத்தி தங்கள் பண்பாட்டை முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக அமைத்துக்கொண்டவர்கள். அந்நிலத்தை ‘நாகரீக’ உலகம் கண்டடைந்தபோது அது பேரழிவாக ஆகியது. பின்னர் ஒரு புதிய உலகம் அங்கே உருவாகி வந்தது ஜெயமோகன் தன் துணைவியுடன் மேற்கொண்ட ஆஸ்திரேலிய பயணம் ஒன்றின் பதிவு இந்நூல். அந்த புதிய நிலத்தை மிக விரிவான தகவல்களுடன் நுணுகி ஆராய்கிறார் ஆசிரியர். ரூ.125/-