தலைமறைவு காலம்

இத்தொகுப்பின் கவிதைகளில் இயற்கையை ஞாபக மறதிக்குரிய பிரசன்னமாகவும், மனிதர்களையும் அவர் களின் கருத்தியலையும் புனைவாகவும் மாற்றாகவும் வைக்கவே முயன்றிருக்கிறேன். யதார்த்தம் இயற்கையை, பொருளை அதன் பயன்மதிப்பில் கணக்கிடும்போது, கலை அதை வேறொன்றாக ஏற்கெனவே நடந்ததில் வேறாக, புதிய ஒன்று அங்கு நடப்பதாக பொதுமனதை குலைக்கும் விதத்தில் அல்லது அதன் தன்னிலையைச் சுட்டி எப்போதும் துவங்கச் சாத்தியமாக இருக்கும் சூன்ய இருப்பை நினைவூட்டும் விதத்தில் வெளிப்படுத்துகிறது. இது ஒரு ஏமாற்று விளையாட்டுத்தான். எனினும், இதற்குள் மனிதச் சம்பவங்களின் கணக்கீடுகள், சாபங்கள், ஏவல்கள், அழித்தொழிப்புகள், நிகழ்தகவுகள், மெய்மைகள், அறங்கள் மற்றும் விடுதலைகளும் மற்றமைகளும் ஒளிந்திருக்கின்றன. – யவனிகா ஸ்ரீராம் ரூ.90/-

ராணியென்று தன்னையறியாத ராணி

ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீடுகள், புனைவுகள், கதைகள் இப்படியாகக் கவிதைகளை உருவாக்குகிறார். நவீன கவிதை மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. – ஷங்கர்ராமசுப்ரமணியன் ரூ.50/-

நீர் அளைதல்

Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று ‘நீர் அளைதல்’ தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள். – எம்.டி. முத்துக்குமாரசாமி ரூ.90/-

சூரியன் தகித்த நிறம்

தமிழ் மொழியின் பெரிய ஆளுமையான கவிஞர் பிரமிள் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு இது. உலக இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த நேரங்களில் தனக்குப் பிடித்த பல கவிதைகளைப் பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார். ரூ.70/- பிரமிள்

சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள்

தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமாகியிருக்கும் எட்கர் ஆலன் போ, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், மல்லார்மே, போரிஸ் பாஸ்டர்நாக் முதலான உலகப் படைப்பாளர்களோடு, ஆஸ்திரேலியக் கவி ஏ. டி. ஹோப், ஆப்பிரிக்கக் கவி அமில்கர் கப்ரல், சீனக் கவி ஸி சுஅன், ஜப்பானியக் கவி டோஸிமி ஹோரியுஷி, மராட்டிய பௌத்தக் கவி பஹ்வான் ஷவை முதலான பல முக்கியப் படைப்பாளிகளின் கவிதைகள் புத்தகத்துக்கு அடர்த்தியும் மதிப்பையும் கூட்டுகின்றன. ரூ.70/- – கால சுப்ரமணியம்

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை

என் எல்லாக் கவிதைகளின் கவிப்பொருளாகவும் நானே இருந்துகொண்டிருக்கிறேன். என் சுயசித்திரத்தை வரையும் செயலாகவே என் கவிதைகள் உருவாகின்றன. என் அகவுலகின் ரகசிய சலனங்களைக் கைப்பற்றக் கவிதை உதவியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் மிகவும் நேசிக்கும் இளமைப் பொலிவு இதன்மூலம் என் வசமாகியிருக்கிறது. ரூ.90/-

தற்கால சிறந்த கவிதைகள்

ஆசிரியர்- கவிஞர் விக்ரமாதித்யன்/ இலக்கியம்,கட்டுரை/ விலை – 70 2000க்கு பின் உருவான் தமிழின் மிகச்சிறந்த கவிஞர்கள் மற்றும் அவர்தம் கவிதைகளை இக்கட்டுரை மூலம் அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். உடன் அக் கவிதைகளின் ஆழத்துக்குள் நம்மை அழைத்துசென்று சில அதிசயங்களையும் உணர்த்துகிறார் ஆசிரியர் .