எப்போதும் வாழும் கோடை

மனுஷ்ய புத்திரன் நவீனக் கவிதை தொடர்பாக மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டுரைகள், மதிப்புரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஆத்மாநாம், சுகுமாரன், பிரமிள், கலாப்ரியா, சி.மணி உள்ளிட்ட பலரது படைப்புலகம் குறித்த பரிசீலனைகள் முன்வைக்கப்படுகின்றன. ரூ.50/-

காத்திருந்த வேளையில்

மனுஷ்ய புத்திரன் கவிஞராக அறியப்படும் மனுஷ்யபுத்திரனை ஒரு கட்டுரையாளராக வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தும் தொகுப்பு. அம்பலம் இணைய இதழில் பத்திகளாக வெளிவந்த இக்கட்டுரைகள் சமூக, இலக்கிய நிகழ்வுகள் பற்றிக் கூர்மையும் அங்கதமும் கொண்ட பார்வைகளை முன்வைக்கின்றன. ரூ.65/-

என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்

மனுஷ்ய புத்திரன் டிசம்பர் 2009 வரை உயிர்மை இதழ்களில் வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பு இது. இவை உயிர்மையில் வெளிவந்த சமயத்தில் வாசகர்களிடையே வரவேற்பையும் தீவிரமான எதிர்வினைகளையும் உருவாக்கின. நம்முடைய காலத்தின் மௌனங்களுக்கும் மறதிகளுக்கும் எதிராக உறுதியான குரலில் பேசும் இக்கட்டுரைகள் சமகால வரலாற்றின் பதிவுகள் மட்டுமல்ல, வாசகர்களோடு நிகழ்த்தப்பட்ட தீவிரமான உரையாடல்களுமாகும். ரூ.150/-

தோன்ற மறுத்த தெய்வம்

மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திருமணங்கள், ஊடகங்கள், ரியாலிட்டி ஷோ, பதிப்புத்துறை, குழந்தைகள் உலகம் என வெவ்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கமல்ஹாசன், ரஜினி காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற வெகுசன ஆளுமைகளுடன் சுஜாதா, சுந்தர ராமசாமி, நகுலன் போன்ற படைப்பாளிகள் குறித்தும் ஆழமான மனப்பதிவுகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் முன்வைக்கின்றன. ரூ.130/-

டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன

மனுஷ்ய புத்திரன் நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம், காட்டிக்கொடுக்கப்படுகிறோம். அரசியல் தத்துவமற்ற, எதிர்ப்பு சாரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன. இந்த தலையங்கங்கள் அரசியல் ஆய்வுகள் அல்ல. மக்களின் கோபங்களையும் நிராசைகளையும் சந்தேகங்களையும் நேரடியாகவும் உணர்வுபூர்வமாகவும் பிரதிபலிப்பதே இவற்றின் நோக்கம். ரூ.140/-

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

மனுஷ்ய புத்திரன் நிலவிடம் காதல் கொண்ட மோசமான ஒரு கவிஞன். அவனிடம் செல்வம் ஏதுமில்லை பயத்தைத் தவிர; அது போதுமானதாகவிருந்தது. ஏனெனில் ஞானியாக அவன் இல்லாததால் வாழ்க்கை ஒரு சூதாட்டம் அல்லது ஒதுங்கியிருப்பது என்றும் ஆசை எதுவும் பெரும் பைத்தியக்காரத்தனம் என்றும் மிக அருவருப்பான விவகாரத்திற்கும் ஓர் அழகு உண்டு என்றும் அவன் அறிந்திருந்தான். . . (ரினால்டோ அரெனாஸ்) ரூ.50/-

நீராலானது

மனுஷ்ய புத்திரன் ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டமாக அமைந்திருக்கிறது. அது ஏற்புக்கும் மறுப்புக்குமிடையே இடையறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கிறது. ரூ.150/-

இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும் இக்கவிதைகளெங்கும் ததும்புகின்றன. இந்த வாழ்க்கையில் அன்பைப் போல தண்டிக்கப்படுகிற, நிராகரிக்கப்படுகிற, வஞ்சிக்கப்படுகிற உணர்ச்சி வேறேதும் இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் மனுஷ்ய புத்திரன் தனது கவிதைகளில் திரும்பத் திரும்ப சந்திக்கிறார். ரூ.190/-

அதீதத்தின் ருசி

மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது. உறவுகளின் பாசாங்குகளை விலக்கி துரோகம் செய்கிறது. சாத்தானோடும் கடவுளோடும் சச்சரவிடுகிறது. சொற்களையும் நம் மனங்களையும் தொடர்ந்து கலைத்து அடுக்குவதன் மூலம் பெரும் அமைதியின்மையை உருவாக்குகிறது. மனுஷ்ய புத்திரனால் குறுகிய காலத்தில் எழுதப்பட்ட இந்தத் தொகுப்பில் அவரது படைப்பு நிலையின் உச்சங்களைத் தொட்ட பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன ரூ.150/-