ஐக்கிய முன்னணி தந்திரம்

ஏ.நிசார் அகமது ஐக்கிய முன்னணி தந்திரம் என்பது சோசலிசப்புரட்சிக் கான அணிகளை ஒன்றுப்படுத்துவதற்க்கு சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைப்பிடிக்கும் ஒரு மிக முக்கியமான கோட்பாடாகும்.இதனை இந்திய மண்ணின் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்படுத்துகிறது என்பது குறித்தும் இதில் பயணித்தப் பாதை,இன்னும் பயணிக்க வேண்டிய பாதை ஆகியவை குறித்தும் வளமான விபரங்களுடன் ஆழமான ஆய்வுடன் அதே சமயத்தில் எளிமையான நடையில் இந்நூலை நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். ரூ.20/-

பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை

கேரிவால் தமிழில்:ஏ.நிசார் அகமது தேச விடுதலையில் புதிய பாதையை கையில் எடுத்த பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் நடைமுறைகளையும்,அரசியல் கோட்பாட்டையும் இந்தியச் சூழலில் பல படிப்பினைகளின் அடிப்படையில் இந்நூல் திறனாய்வு செய்கிறது.இந்நூலில் அறிமுகம்,வரலாறு வார்த்தெடுத்த வீரவாள்,ஆட்சியை தூக்கியெறியும் கொள்கையும்(அனார்சிஸமும்)அதற்கு மேலும்,மார்க்சியத்தை நோக்கி,திறனாய்வு மதிப்பீடு ஆகிய தலைப்புகளில் கருத்துகள் விவாதிக்கப்பட்டுள்ளன. ரூ.50/-