எனக்கு இருபது வயது ஆரம்பித்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அவை இலங்கைப் பத்திரிகை களிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. என் அன்பு நண்பர் செ.கணேசலிங்கன் 1964இல் இந்தியா சென்று எனது Ôஅக்கா’ சிறுகதைத் தொகுப்பை தானாகவே பதிப்பித்தார். 500 பிரதிகளை சென்னையிலிருந்து கொழும்புக்கு கப்பலில் கொண்டுவந்தார். அதில் 10 புத்தகங்களை எனக்கு ஆசிரியர் என்ற வகையில் இலவசமாகத் தந்தார். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது என் வாழ்க்கையில் முதன்முதல் சொந்தமாகச் சம்பாதித்தது நான் எழுதிய ‘அக்கா’ சிறுகதைப் புத்தகம்தான். – அ.முத்துலிங்கம் ரூ.90/- Tags: அ.முத்துலிங்கம், சிறுகதை, நற்றிணை
No Comments