அதே இரவு அதே வரிகள்
August 17, 2016
எஸ். ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய அட்சரம் இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்தெடுத்த தொகை நூல் இது. நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், நோபல் பரிசு ஏற்புரைகள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கதைகள் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹே, குந்தர் கிராஸ், மிலாராட் பாவிக், மிலன் குந்தேரா, காப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, மாபௌஸ், ஜோசே சரமாகோ, கென்சுபரோ ஒயி, ஏ.கே.ராமானுஜம் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பின் வழியே உருவாகும் படைப்பனுபவமும் கருத்தாக்கங்களும் மிகுந்த மன எழுச்சியை உருவாக்குகிறது. உலக இலக்கியத்தின் ஆதாரமான சுருதியை கோடிட்டுக் காட்டுகிறது.
ரூ.150/-
No Comments