சாரு நிவேதிதா வாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சுவாரசியமுமே அந்த வடிவத்தை உயிருள்ளதாக மாற்றுகிறது. சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு இது. இவை வினா-விடைகள் என்பதைவிட சாரு தனது வாசகர்களுடன் தொடர்ந்து நடத்திவரும் நீண்ட உரையாடலின் தொடர்ச்சி என்று சொல்லலாம். முகமற்ற வாசகர்களின் கேள்விகளுக்கு சொல்லப்படும் பொதுவான பதில்களிலிருந்து மாறுபட்ட இந்த நூல் ஒரு அந்தரங்கமான தொனியை உருவாக்குகிறது. ரூ.120/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா
No Comments