எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை. ஒரு எழுத்தாளன் செயல்பாடுகளும் அக்கறைகளும் எவ்வளவு விரிந்த களனில் இருக்கமுடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரம் அவரது எழுத்தியக்கம். சுந்தர ராமசாமி துவங்கி சமயவேல் வரை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூலிது ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகைப் புரிந்துகொள்ளவும் அதன் சிறப்புகளை அடையாளம் காட்டுவதற்கும் நாற்பதுக்கும்மேலான விமர்சனக் கட்டுரைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒரு இளம்வாசகன் தமிழின் முக்கியமானதொரு படைப்பாளுமையை சரியாகப் புரிந்து கொள்ள முடியும் ரூ.170/- Tags: உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரைகள்
No Comments