தேவதச்சன் சாதாரணமான சொற்றொடர்களில் அசாதாரணமான காண்நிலைகளைப் பதிவு செய்பவை தேவதச்சனின் கவிதைகள். அறிவின் பாதையிலும் உணர்ச்சிப் பெருக்கின் பாட்டையிலும் மாறிமாறிப் பயணம் செய்பவை. வாசக மனதின் நனவிலித் தளத்துடன் கொள்ளும் நீண்ட உரையாடலின் அறுபட்ட பல்வேறு துணுக்குகளாக முழுமை கொள்பவை. ஊடறுக்கப்பட்ட கண்ணாடிக் கோளங்களின் ஒளிர்வுடன் முன்வைக்கப் படும் அன்றாடக் காட்சிகளின் மூலம் வாசகனுக்குள் புதிர்வெளியின் கிறுகிறுப்பை, அதன் பரவசத்தைத் தொற்றச் செய்பவை. தேவதச்சனின் 137கவிதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு. ரூ.85/- Tags: உயிர்மை, கவிதைகள், தேவதச்சன்
No Comments