சாரு நிவேதிதா
இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள். உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா? நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது. சாரு நிவேதிதா (முன்னுரையிலிருந்து)
ரூ.110/-
No Comments