ரவிக்குமார் இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விவாதிக்கும் இக்கட்டுரைகள் மானுடத்தின் மறுபாதியை தின்னும் அநீதியின் இருளை சுட்டிக்காட்டுகின்றன. சமூக கலாச்சார வாழ்வின் பல்வேறு தளங்களில் பெண்களின் மீது நிகழும் குரூரமான வன்முறைகளையும் புறக்கணிப்புகளையும் பற்றிய கவனத்தை ரவிக்குமார் இக்கட்டுரைகளின் வழியே பரந்துபட்ட தளத்தில் உருவாக்குகிறார். பெண்ணிய கோட்பாடுகளை தமிழில் உருவாக்குவதிலும் பெண்ணிய எழுத்துக்களை தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வந்திருக்கும் இவர் இத்தொகுப்பின் வழியே சமகாலப் பெண்களின் துயரங்களுக்கு சாட்சியம் அளிக்கிறார் ரூ.75/- Tags: உயிர்மை, கட்டுரைகள், ரவிக்குமார்
No Comments