வா. மணிகண்டன் மின்னஞ்சல், ஏடிஎம் கருவி மூலமாக செய்யப்படும் குற்றங்கள் எனத் தொடங்கி, குழந்தைகள் மீதான வன்முறைகள், விரவிக்கிடக்கும் ஆபாசம், பயங்கரவாதம் என இணையத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமானது முதல் மிகக் காமெடியானது வரையிலான சில குற்றங்களை இந்தப் புத்தகத்தில் வாசிக்கப் போகிறீர்கள். கணினி என்ற தனித்த உலகத்தில் மிகச் சிறந்த அறிவாளிகளால் அரங்கேற்றப்படும் இந்தக் குற்றங்கள் சுவாரசியமான நடையில் விவரிக்கப்படுவதுடன் உங்களின் மீது இதே குற்றங்கள் நிகழ்த்தப்படுவதை எப்படித் தடுக்கலாம் என்னும் அடிப்படையான நுட்பத்தை கதை சொல்வது போல சொல்லிச் செல்கிறது இந்தப் புத்தகம். ரூ.50/- Tags: உயிர்மை, கட்டுரைகள், வா. மணிகண்டன்
No Comments