சு. தியடோர் பாஸ்கரன் தமிழில் சுற்றுச் சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல் களையும் உருவாக்கியதில் சு.தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது சூழலியல் நெருக்கடிகள் தொடர் பாக அவர் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் அவை குறித்த அக்கறைகளை பெரிதும் பரவலாக்கி வந்திருக்கின்றன. வன உயிர்கள், அபூர்வ உயிரினங்களின் அழிவு, வனங்கள் மறைந்து போதல், நீர் நிலைகள் மாசுபடுத்தப்படுவது, இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தொடர்ந்து உருவாக்கும் வாழ்க்கைமுறை என மிக விரிவான தளத்தில் இக்கட்டுரைகள் பேசுகின்றன. தியடோர் பாஸ்கரனின் எழுத்துக்களில் வெளிப்படும் சுயமான பார்வைகளும் அசலான அனுபவங்களும் பெரும் நம்பகத் தன்மையை உருவாக்குவது மட்டுமல்ல, அவை வாசகனின் இதயத்தை நெருங்கித் தொடுகின்றன. இது துறை சார்ந்த எழுத்துகளில் மிக அபூர்வமாக வெளிப்படும் ஓர் இயல்பாகும். இது அவரது சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி. ரூ.100/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சு. தியடோர் பாஸ்கரன்
No Comments