சாரு நிவேதிதா வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்ரவதையின் தொழில்நுட்பம் நுணுக்கமாகத் தொடர்ந்து மாறுதலடைந்து வந்திருக்கிறது. சித்ரவதைகள்மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றிகொள்ளும்போது நிகழ்வது, ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல். சாரு நிவேதிதா இந்த நாவல்மூலம் காட்டும் உலகம் கடும் மன அதிர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணம், அந்த உலகத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதுதான். ரூ.90/- Tags: உயிர்மை, சாரு நிவேதிதா, நாவல்கள்
No Comments