சுஜாதா நானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் சாத்தியங்களைக் காட்டுகிறது. தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள், வயசாவதைத் தாமதப்படுத்தும் நவீன அம்ருத கலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் எது நிகழும், எது மிகை என்பதையும் நாம் அறியவேண்டும். இந்தப் புதிய தொழில்நுட்பம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் சதா மெகா சீரியல் அரை மயக்க நிலையிலும் நடிகைகளின் இடுப்பளவிலும்தான் ஆழ்ந்திருப்பீர்கள். உலகம் நம்மைப் புறக்கணித்துவிட்டு எங்கோ ஓடிப்போய்விடும். ரூ.35/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சுஜாதா
No Comments