எஸ். ராமகிருஷ்ணன் இவை பதேர்பாஞ்சலி பற்றிய எனது மனப்பதிவுகள். இந்தக் குறிப்புகள் பல நேரங்களில் மனதில் தோன்றி மறைந்தவை. ஆய்வு பூர்வமாகவோ, கோட்பாட்டு அடிப்படையிலோ இவை அணுகப்படவில்லை. ஒரு எளிய சினிமா பார்வையாளன் என்ற ரீதியில் பதேர் பாஞ்சாலி எனக்குள் உருவாக்கிய விளைவுகளைத் தொகுத்திருக்கிறேன் என்றே சொல்லலாம். பதேர் பாஞ்சாலியைப் பற்றிய ரேயின் கருத்துகளை, அதன் உருவாக்கத்தைப் பற்றிய தகவல்களை, கட்டுரைகளை வாசிக்கத் துவங்கிய பிறகு அந்தப் படம் குறித்த அனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கியது. ஆகவே எனது வாசிப்பு அனுபவமும் இந்த நூலின் பகுதியாகவே இடம்பெற்றிருக்கிறது. ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதற்கான சில சாத்தியங்களை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதை நோக்கியே இந்தப் பதிவுகள் அமைந்திருக்கின்றன. பதேர் பாஞ்சாலி படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு உலகம் முழுவதும் சத்யஜித்ரே கௌரவிக்கப்பட்டார். அதை நினைவுகொள்ளும் விதமாகவும் ஒரு அரிய இந்திய சினிமாவைப் புரிந்து கொள்வதற்கான எனது எத்தனிப்பாகவும் இந்த நூலைக் கருதுகிறேன். ரூ.135/- Tags: உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், திரைப்படக் கலை
No Comments