தமிழச்சி தங்கபாண்டியன்
இன்று நகரமாக இருப்பவை நேற்றைய கிராமங்களே. மனிதர்களை மட்டுமல்ல, இடங்களையும் நாம் தீண்டாதவையாக மாற்றி வைத்திருக்கிறோம். நகரம் அதற்குரிய இயல்பில் இருக்கிறது. கிராமம் அதற்குரிய ஒழுங்கில் இருக்கிறது. உயர்ந்தது, தாழ்ந்தது என்பது நோய்க்கூறு கொண்ட மனங்களின் வெளிப்பாடு. தமிழச்சி, அசலான கிராமத்து மனிதர்களையும், நகரத்து மனிதர்களையும் காட்டுகிறார். கிராமத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சிறப்புப் பெயர் இருக்கும். சிறப்புப் பெயர்கள் ஒரு கதையை, வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு இருக்கும். தமிழச்சி இடத்தைவிட, மனிதர்களைவிட, இடத்திற்கும், மனிதர்களுக்கும் பின்னால் இருக்கும் கதையை, வரலாற்றை நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ், தமிழர்கள், தமிழ் அடையாளம் குறித்த தெளிவை நாம் ‘பாம்பட’த்தின் வழியே அறியலாம். நிலவியல் சார்ந்த விழுமியங்கள்தான் கலாச்சாரம், பண்பாடு என்பது மட்டுமல்ல – நாம் என்பதும். நம்முடைய நிலவியல் சார்ந்த வாழ்வை உற்று நோக்கக் கோருகிறது ‘பாம்படம்’.
ரூ.70/-
No Comments