மஞ்சணத்தி

August 11, 2016

தமிழச்சி தங்கபாண்டியன்

நகுலனின் ‘சுசீலா’ போலவும், கலாப்ரியாவின் ‘சசி’ போலவும், தமிழச்சியின் ‘வனப்பேச்சி’ பல அர்த்தங்களை ஒருங்கிணைத்த, அதீத ஆற்றலுள்ள உருவமாகிறாள்….. ‘மஞ்சணத்தி மரம்’ போன்ற கவிதைகளில் வரும் ஆற்றல், ஒரு அரூவமான மொழிச்சக்தியாகும். தமிழச்சி ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியாவில் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில், ஆங்கிலத் துறையினர் மூலம்தான் ‘மாடர்னிசம்’ அவர்கள் அவர்கள் மொழிகளில் நுழைந்தன. தமிழச்சி கவிதைகள் நேர்மாறாக மாடர்னிசத்தைத் தாண்டி நிற்கின்றன….. தமிழச்சி, தமிழ்க்கவிதை குவலயமயமாகும் தருணத்தில், பிராந்தியத்திலிருந்து ஒரு வனப்பேச்சி உருவாக்கிக்கொண்டு வருகிறார். இதுவும் பின் நவீனத்துவத்தின் கிழக்கத்திய போக்குத்தான். வனப்பேச்சியின் கதகதப்பில் பாவாடை மண்ணில் புரள இளவரசி போல் கிராமத்தில் வாழ்ந்த ஒரு குட்டிப் பெண் நகரைச் சரணடைந்து, தாயாகி, நகரின் வெறுமையும், நாடு கடந்து தமிழ்ச்சாதி சந்திக்கும் சிறுமையும் கண்டு, தன் ஆதிக் கொள்கைகளைக் கைவிடாமல் நம்பிக்கையுடன் கவிதையில் இயங்கிக்கொண்டிருக்கிற தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள் மென்மேலும் மெருகேறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரூ.190/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *