முதல் நாவலாசிரியர்கள் அவர்களுடைய சூழ்நிலை எப்படியிருப்பினும் மனக்கசப்போ குரோதமோ இல்லாமல்தான் எழுதியிருக்கிறார்கள். சமூகம் குறித்துக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்தாலும் பொதுவாக மனிதர்கள்மீது பரிவுணர்ச்சியே கொண்டிருந்தார்கள். இதை இயல்பாகச் செய்தார்கள். நாவல் வடிவம் ஒருவாறாக நிலைபெற்று அதற்கு விற்பனை சாத்தியம் உண்டு என்று விளங்கிய பிறகுதான் வாசகனை நாடிப் போகும் போக்கு தொடங்கியது. ஆதலால் முதல் நாவல்களில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் உயரிய இலட்சியங்களை மனதில் கொண்டே அந்த நாவல்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. – அசோகமித்திரன் ரூ.110/- Tags: அசோகமித்திரன், கட்டுரைகள், நற்றிணை, நாவல்கள்
No Comments