சாரு நிவேதிதா பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக நிகழ்ந்த சர்ச்சைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் அகஸ்தோ போவாலின் ‘கண்ணுக்குப் புலப்படாத தியேட்டர்’ என்ற கட்டுரையின் தமிழாக்கமும் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகள் இன்று நினைவுகூரப்படுவதன் காரணம் கலை இலக்கியப் பிரதிகளின் மீதான கண்காணிப்பும் ஒடுக்குமுறைகளும் முன்னெப்போதையும்விட கடுமையாகி வருகின்றன என்பதாலேயே. அந்த வகையில் இந்த சர்ச்சையை முன்னிட்டு வைக்கப்படும் வாதங்கள் இன்றும் காலப்பொருத்தமுடையவை என்பதில் சந்தேகமில்லை. ரூ.60/- Tags: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா
No Comments