எஸ். ராமகிருஷ்ணன் ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மௌனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாகவும் மொழிரீதியாகவும் எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். அவை தகவல்களாலோ வாழ்க்கை விபரக்குறிப்புகளாலோ ஆனவையல்ல. மாறாக அந்த எழுத்தாளர்கள் தனது ஆளுமையைக் கடந்து சென்றவிதம் குறித்த கவித்துவம் மிகுந்த பதிவுகள் இவை. அந்தப் பதிவுகளினூடே அவர் அந்தப் படைப்பாளிகளின் முதன்மையான, சாராம்சமான படைப்புகள் குறித்த மிக நுண்மையான அவதானங்களையும் வெளிப்படுத்துகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை. ரூ.165/- Tags: உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரைகள்
No Comments