எஸ். ராமகிருஷ்ணன் நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு. இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கிய பிம்பங்களைத் தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன. வெறும் தகவல் குறிப்புகளாக அல்லாமல் தீவிர மன எழுச்சியையும் படைப்பாளியின் சவால்கள் குறித்த உக்கிரமான கேள்விகளையும் எழுப்பும் இந்நூல் ஒரு ஆய்வாளனின் கடும் உழைப்பும் ஒரு படைப்பாளியின் தீவிர அழகியலும் கொண்டதாகத் திகழ்கிறது. ரூ.150/- Tags: உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரைகள்
No Comments