ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி தாஸ்தோவ்ஸ்கியின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கல். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளுகிறார்கள். பேசிக் கொள்ளுகிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள். ரூ.70/- Tags: எதிர் வெளியீடு, நாவல்கள், மொழி பெயர்ப்பு நாவல்
No Comments