ஆத்மா கே.ரவி ஏன்?எதற்கு?எப்படி?என்கிற கேள்விகள் நம் வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே துவங்குகின்றன.இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்நூலின் வாயிலாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ளும்போது அது ஆச்சரியத்துடன் நமக்கு மெல்லிய அதிர்ச்சியையும் அளிக்கிறது. ரூ.190/-
ஏ.பாலசுப்பிரமணியம் மதத்தின் பெயரால் பயங்கர யுத்தங்கள் நடந்துள்ளன.படுகொலைகள் இன்றும் நடக்கின்றன.ஆனால்,நாத்திகர்கள் ஆத்திகர்களைக் கொலை செய்ததாகவோ தங்கள் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதற்காக யுத்தம் நடத்தியதாகவோ வரலாறு இல்லை என்கிற வரிகளோடு துவங்கும் இப்புத்தகம் ஒரு ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் மூலம் கடவுள் இருக்கிறது என்கிற நம்பிக்கையின் ஆணி வேரை அசைக்கிறது.பித்தப்பை என்னென்ன செய்கிறது என்பதுகூட நமக்கு முழுசாகத் தெரியாது.உடற்கூறு விஞ்ஞானத்தின் அறியாமை காரணமாக நம் உடல் பற்றியே பல தவறான கருத்துக்கள்,மூட நம்பிக்கைகளை நாம் கொண்டிருக்கிறோம்.அப்படி இருக்கும்போது பிரபஞ்சம் முழுவதும் பற்றிய ஞானத்தில் நிச்சயமாகக் குறைபாடுகள் இருக்கும்.ஆனால் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார் என்று கூறுவது எப்படி சரியாகும் என்கிற மாதிரி சின்னச் சின்னக் கேள்விகள்.பின் அவற்றுக்கான விடைகள்,பின் அதைத் தொடரும் அடுத்த கேள்வி என்கிற பாணியில் நகர்ந்து செல்லும் இப்புத்தகம் நாத்திகத்தை முரட்டடியாக அல்லாமல் அறிவியல் அடிப்படையில் ஆத்திகரும் ஒப்புக் கொள்ளும் வண்ணம் எடுத்துச் சொல்கிறது.இப்பிரபஞ்சத்தில் என்றென்றும் பொருள் இருந்தே வந்திருக்கிறது.படைப்பு என்பதே இல்லை.ஆகவே படைத்தவனும் இல்லை என்று கச்சிதமாக உரையாடல் நிறைவுபெற புத்தகம் முடிகிறது.வெறும்16பக்கங்களில் இவ்வளவு விஷயங்களை இவ்வளவு எளிமையாகச் சொல்லி இருப்பது நூலாசிரியரின் மேதமையன்றி வேறென்ன? ரூ.10/-
வி.முருகன் கலிலீயோ என்ன கண்டுபிடித்தார்?அவரின் கண்டுபிடிப்புகள் ஏன் பல சர்ச்சைகளை அவர் காலத்தில் எழுப்பின?அவருடைய சாதனைகளும் வேதனைகளும் எப்படி பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு உதவின என்று விரிவாக விளக்குவதுதான் இந்நூல். ரூ.50/-
ஆயிஷா இரா.நடராசன் சிறார் இலக்கியம், கல்வியியல், அறிவியல் தமிழ் இலக்கியங்களில் நாடறிந்த எழுத்தாளரான ஆயிஷா இரா.நடராசன், எல்லா அறிவியலுக்கும் அடிப்டை அறிவியல் எனப்படும் இயற்பியல் வரலாறு குறித்து ஒரு பருந்துப் பார்வையை வழங்குகின்றார். நியூட்டன் காலத்து ‘ஈர்ப்புவிசை’ முதல் ‘செர்ன்’(சிணிஸிழி) காலத்து ‘ஈர்ப்பு அலைகள்’ வரையிலான வளர்ச்சியின் வரலாற்றை ஒரு புனைவு கதை போல் வாசிப்பு இன்பத்தோடு அறிந்து கொள்ள உதவும் நூல். ரூ.100/-
ஆதி வள்ளியப்பன் தினமணி சிறுவர்மணியில் வெளியான காலத்திலேயே பரவலான வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அன்றாட வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளின் பின்னணியல் பொதிந்திருக்கும் அறிவியல் அம்சங்களை எளிமையாக விளக்குகின்றன. முட்டை நீள்வட்டமாக இருப்பதற்கான காரணம் முதல், ஏ.டி.எம். எப்படி வேலை செய்கிறது என்பதுவரை இந்தப் புத்தகம் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது. ரூ.70/-
எஸ்.சுஜாதா · தேனீ கொட்டுவது ஏன்? · பெங்குவின் ஏன் பறப்பதில்லை? · வண்ணத்துப்பூச்சிகளுக்கு வண்ணம் ஏன்? · ஆப்பிரிக்க யானைகள் ஏன் அழிந்து வருகின்றன? · ஈல்களின் சாகசப் பயணம் ஏன்? · பூனை மியாவ் என்று கத்துவது ஏன்? · கிளி பேசுமா? · பாண்டாவுக்குச் சின்னம் ஏன்? · பச்சைப் பல்லியின் வால் ஒளிர்வது ஏன்? · சீல்கள் தத்தெடுக்குமா? · பீவர் அணை கட்டுவது ஏன்? · நீர்யானை கொட்டாவி விடுமா? · டால்பின் புத்திசாலியா? ரூ.45/-
C.Arvind Kumar * What is free software? * Copyleft * Hack,Hackers and Hacking * Why Political Liberty Depends on Software Freedom More than Ever * The Danger of Software Patents * Liberation by Software ரூ.100/-
சி.ராமலிங்கம் இன்றைய உலகம் அறிவியலின் கைக்குள் அடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.அறிவியலை புறந்தள்ளி மனித வாழ்க்கையை இன்று கற்பணை செய்துகூடப் பார்க்க முடியாது.அப்படிப் பார்த்தால் அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும்.தனி மனித வாழ்க்கையானாலும் குழு அல்லது சமூக வாழ்க்கையானலும நாம் வழ்வது அறிவியலார்ந்த வாழ்க்கையே.இப்படி அறிவியல்மனித வாழ்க்கையில் இரண்டறக் கலப்பதற்கு எண்ணற்ற அறிவியலாளர்களின் அயராத உழைப்பும்,கண்டுபிடிப்புகளும்தான்.எல்லா காலக்கட்டங்களிலும் அறிவியல் மனித வாழ்க்கைக்கு நெம்புகோலாக இருந்திருக்கிறது.ஆனால் மதம் பல கண்டுபிடிப்புகளையும்,கண்டு பிடிப்பாளர்களையும் தன் கோரப் பற்களால் கடித்துக் குதறியிருக்கிறது.கொன்றும் தீர்த்திருக்கிறது.இன்றுவரை இந்த நிலை நீடித்துக் கொண்டிருக்கையில்,பல கண்டு பிடிப்புகளை மதங்கள் சுவீகரித்துக் கொண்டிருக்கின்றன.இன்றைக்கு நம் கண் முன்னே அளப்பரிய சக்தியாய் எழுந்து நிற்கும் அறிவியலை நாம் உணர்வது முக்கியம்.அதோடு நிற்காமல் அறிவியல் கண்ணோட்டம்,அறிவியல் பார்வையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல போதுமான அறிவியல் இலக்கியங்கள் இல்லை.இதனை போதுமான அளவிற்கு வளர்த்தெடுப்பது நம் அனைவரின் கடமை.மற்ற இலக்கியங்கள் பழங்காலந்தொட்டு தொடர்கின்ற நிலையில் அறிவியல் இலக்கியம் தனக்குரிய இடத்தை இன்னும் நிரப்பிக்கொள்ளவில்லை என்றே கருதலாம்.இதன் முயற்சியாக இந்நூலைச் சொல்லலாம். ரூ.150/-
சி.ராமலிங்கம் ஆகாயம் என்பது நம் அனைவருக்கும் பிரமிட்பூட்டும் ஒன்று.ஆதி மனிதனிலிருந்து இன்றைக்கு வாழ்ந்துவரும் நவநாகரீக மனிதர்கள் வரைக்கும் ஆகாயத்தை உற்று நோக்காதவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.வான் பொருள்களாகிய சந்திரன்,சூரியன்,நட்சத்திரங்கள் என்று அனைத்தையும் அந்த காலந்தொட்டே தொடர்ந்து கூர்ந்து நோக்கி வந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.அவர்கள் பூமிக்கும வானத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் நம்பி வந்தார்கள்.உலக வரலாற்றில் ஆதிகாலந்தொட்டு வானவியல் அறிவு நன்றாக இருந்ததற்கான சான்றுகள் பழங்கால கல்வெட்டுகள்,நூல்கள்,கட்டுமானங்கள் போன்ற பல்வேறு வகைகளில் நமக்குத் தெரிய வருகின்றன.இந்த ஆகாயச் சுரங்கம் என்ற நூல் வானத்தில் நிலைபெற்ற அனைத்து வான் பொருள்களைப் பற்றியும் விளக்கிக் கூறும் நூலல்ல.அவைகள் அனைத்தும் இந்த ஒரு நூலில் சொல்லிவிடவும் முடியாது.இந்த நூலைப் படிப்போருக்கு ஆகாயம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகமில்லை.மக்களுக்கு அறிவியலை கொண்டு செல்லும் வகையில் இம்மாதிரி வானவியல் சம்மந்தப்பட்ட நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன.அந்த நூல்கள் வரிசையில் ஆகாயச் சுரங்கமும் ஒன்று.இது படிப்போரின் கவனத்தை ஈர்க்குமென்றே நம்புகிறோம். ரூ.100/-
ஆயிஷா இரா.நடராசன் அறிவியல் வரலாறு.கண்டுபிடிப்புகளின் வரலாறாக பார்க்கப்படுகிறது.அதன் உட்கூறுகளை உற்றுநோக்கும் ஒருவர்,அது புத்தகங்களின் வரலாறு என்பதைக் கண்டுன்ற முடியும். ரூ.10/-