கைமறதியாய் வைத்த நாள்

யுவன் சந்திரசேகர் என்றோ மலர்ந்து என்றென்றைக்குமாக மணம்வீசிப் பரந்திருக்கும் பூவின் இதழொன்றில் இப்போது பிறந்து துள்ளுகிறது ஒரு ஈசல். கூட்டத்துடன் இணைந்தும் பிரிந்தும் விலகியும் சடசடக்கும் ஈசலின் சிறகில் பளபளக்கிறது நித்தியத்துவத்தின் ஒரு துளி. ரூ.50/-

நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்

மு. சுயம்புலிங்கம் நவீனத் தமிழ்க் கவிதை தனது வேர்களையும் நிலங்களையும் தேடிச் சென்ற காலகட்டத்தில் மன எழுச்சியூட்டும் நிலக்காட்சிகளையும் வாழ்வியல் சித்திரங்களையும் உருவாக்கியவர் மு.சுயம்புலிங்கம். கரிசல் பூமியின் வெக்கையையும் கண்ணீரையும் பூச்சுகளற்ற மொழியில் முன்வைத்த சுயம்புலிங்கம் கவிதைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குகின்றன. மக்கள் கவிஞன் என்ற சொல் சுயம்புலிங்கத்தின் வழியே அதன் அசலான அர்த்தத்தை அடைகிறது. ரூ.100/-

உப்பு

ரமேஷ்-பிரேம் எங்கள் மலை பறம்பு எங்கள் நாடு பறம்பு நாடு எங்கள் தலைவன் பாரி எங்கள் கவிஞன் கபிலன் நாம் யார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம். ரூ.60/-

ஒற்றனை தொலைத்த செய்தி.

முனியப்ப ராஜ் முனியப்பராஜ் உற்சாகத்துடன் எழுதத் துவங்கியிருக்கும் கவிஞர்களில் ஒருவர். நவீனத் தமிழ்க் கவிதை மரபில் திட்டவட்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் வடிவ நேர்த்தி இவர் கவிதைகளில் இயல்பாக அமைந்திருக்கிறது. கவிஞர் தன்னுடைய யோசனைகளைத் தெளிவாகக் குழப்பங்களுக்கு இடமில்லாத வகையில் முன்வைக்கிறார். கவிதைகளின் ஆரம்பம், முடிவு குறித்த திட்டவட்டமான யோசனைகளும் வரையறைகளும் முனியப்பராஜுவுக்கு இருக்கிறது. கடந்து வந்த உலகம், எதிர்கொள்ளும் உலகம், தன்னால் புரிந்து கொள்ள முடியாத உலகம் என முனியப்பராஜின் இருப்பு இக்கவிதைகளில் இடம்பெறுகிறது. ரூ.40/-

தவளை வீடு

பழனிவேள் பழனிவேளின் கவிதைகள் நிலத்தின் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர முயல்பவை. பௌதீக உடலுக்கும் நிலத்திற்குமான சிருஷ்டிகர தருணத்தின் சொற்களை ஒலியின் நுண் அலகுகளில் பொருத்த முயல்வதன் மூலம் உணர்வுகளின் நடனத்தை இக்கவிதைகள் கிளர்த்துகின்றன. ரூ.40/-

பாப்லோ நெரூதா கவிதைகள்

சுகுமாரன் ‘இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்’ என்று எழுதினார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மகத்தான காதல்களையும் மாபெரும் தீவினைகளையும் பாடும் நெரூதாவின் கவிதைகள் கவிஞர் சுகுமாரனின் உக்கிரமான மொழியில் தமிழுக்கு வருகின்றன. நெரூதாவின் தேர்ந்தெடுத்த 100கவிதைகள், அவரது நோபல் பரிசு உரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்புடன் நெரூதாவின் வாழ்வையும் கலையையும் பற்றிய ஆழமான பதிவுகளும் கொண்டது இத்தொகுப்பு. தமிழில் நெரூதாவின் உலகம் இவ்வளவு விரிவாகத் தொகுக்கப்படுவது இதுவே முதல் முறை. ரூ.120/-

கடைசி டினோசர்

தேவதச்சன் சாதாரணமான சொற்றொடர்களில் அசாதாரணமான காண்நிலைகளைப் பதிவு செய்பவை தேவதச்சனின் கவிதைகள். அறிவின் பாதையிலும் உணர்ச்சிப் பெருக்கின் பாட்டையிலும் மாறிமாறிப் பயணம் செய்பவை. வாசக மனதின் நனவிலித் தளத்துடன் கொள்ளும் நீண்ட உரையாடலின் அறுபட்ட பல்வேறு துணுக்குகளாக முழுமை கொள்பவை. ஊடறுக்கப்பட்ட கண்ணாடிக் கோளங்களின் ஒளிர்வுடன் முன்வைக்கப் படும் அன்றாடக் காட்சிகளின் மூலம் வாசகனுக்குள் புதிர்வெளியின் கிறுகிறுப்பை, அதன் பரவசத்தைத் தொற்றச் செய்பவை. தேவதச்சனின் 137கவிதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு. ரூ.85/-

இரவின் ரகசியப்பொழுது

கோகுலக் கண்ணன் அதீதத் தனிமைக்குள் எரியும் ஒரு வாழ்நிலையின் பிம்பங்களாலானவை கோகுலக்கண்ணனின் கவிதைகள். நவீன வாழ்க்கையின் தீராத பயங்களையும் விலகல்களையும் வேரின்மையையும் இக்கவிதைகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. நேரடியான வெளிப்படையான உரையாடல் தன்மை மிகுந்த, பாசாங்கற்ற சொற்களால் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கின்றன. ரூ.50/-

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

மனுஷ்ய புத்திரன் நிலவிடம் காதல் கொண்ட மோசமான ஒரு கவிஞன். அவனிடம் செல்வம் ஏதுமில்லை பயத்தைத் தவிர; அது போதுமானதாகவிருந்தது. ஏனெனில் ஞானியாக அவன் இல்லாததால் வாழ்க்கை ஒரு சூதாட்டம் அல்லது ஒதுங்கியிருப்பது என்றும் ஆசை எதுவும் பெரும் பைத்தியக்காரத்தனம் என்றும் மிக அருவருப்பான விவகாரத்திற்கும் ஓர் அழகு உண்டு என்றும் அவன் அறிந்திருந்தான். . . (ரினால்டோ அரெனாஸ்) ரூ.50/-