அதீதத்தின் ருசி

மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது. உறவுகளின் பாசாங்குகளை விலக்கி துரோகம் செய்கிறது. சாத்தானோடும் கடவுளோடும் சச்சரவிடுகிறது. சொற்களையும் நம் மனங்களையும் தொடர்ந்து கலைத்து அடுக்குவதன் மூலம் பெரும் அமைதியின்மையை உருவாக்குகிறது. மனுஷ்ய புத்திரனால் குறுகிய காலத்தில் எழுதப்பட்ட இந்தத் தொகுப்பில் அவரது படைப்பு நிலையின் உச்சங்களைத் தொட்ட பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன ரூ.150/-

நான் நீ மீன்

கலாப்ரியா நவீன தமிழ்க்கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும் புறக்காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும் அமைதியின்மையினூடே தமிழ்மனம் அடையும் தத்தளிப்புகளிலிருந்து இந்தக் காட்சிகள் விரிகின்றன. இந்தத் தொகுப்பும் அதற்கு ஒரு சாட்சியம். தனது கவிதை மொழியினைத் தொடர்ந்து புதிய பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதன் வழியே ஒரு புதிய வாசிப்பனுபவத்தை இத்தொகுப்பில் கலாப்ரியா உருவாக்குகிறார். ரூ.50/-

அருந்தப்படாத கோப்பை

மனுஷ்ய புத்திரன் உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீர் இல்லை. நீங்கள் ஒரு உலர்ந்த இலையைப் போல காற்றில் மிதந்து செல்கிறீர்கள். இந்தக் கவிதைகள் எவ்வாறு வாழ்வின் கிளைகளோடும் மலர்களோடும் தன்னை விடுவித்துக்கொண்டன என்பதன் சாட்சியம்தான் இந்தத் தொகுப்பு. உடைந்த நிலவாகவோ உதிர்ந்த நிலவாகவோ தன்னை உருவகித்துக் கொள்வது ஒரு மனிதனுக்கு சந்தோஷமான விவகாரம் அல்ல. ஆனால் ஒரு கவிஞனுக்கு அந்த துக்கம் தரும் இதமும் பரிவும் அவ்வளவு தேவையாக இருக்கிறது. ரூ.80/-

இரண்டு சூரியன்

தேவதச்சன் தேவதச்சனின் கவிதைகள் தமிழ்வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவ சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்த போதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன. தினசரி வாழ்வின்மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. கவிதையின் வழியாக அவர் தமிழ்வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார். இயேசுநாதரும் கண்ணகியும் ஆண்டாளும் அவரது கவிதைக்குள் இதுவரை அறியப்பட்டிருந்த கருத்துருவங்களைக் கலைந்து பிரவேசிக்கிறார்கள். – எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.40/-

நீருக்குக் கதவுகள் இல்லை

சுகுமாரன் ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழுதிச் செல்கின்றன. அவர் நம் அந்தரங்கத்திற்கு எவ்வளவு அருகில் வரமுடியுமோ வந்து உரையாடலின் மகத்துவம் மிக்க தருணங்களைத் திறககிறார். ரூ.70/-

பசித்த பொழுது

மனுஷ்ய புத்திரன் இதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள் இதைத்தானே பயந்து பயந்து மறைக்க விரும்பினீர்கள் இதற்குத்தானே அப்படி ஏங்கி அழுதீர்கள் இதற்குத்தானே அவ்வளவு ரத்த சிந்தினீர்கள் இப்படித்தானே உங்களை பணயம் வைத்தீர்கள் இப்படித்தானே உங்களை நீங்களே பரிசளித்தீர்கள் இதைத்தவிர வேறெதையும் பேசவில்லை இந்தக் கவிதைகள். இந்த தொகுப்பில் உள்ள 236 கவிதைகளில் 235 கவிதைகள் 2011ல் ஒன்பதே மாதங்களில் எழுதப்பட்டவை ரூ.350/-

அந்நிய நிலத்தின் பெண்

மனுஷ்ய புத்திரன் காமத்தின் புதிர்ப் பாதைகள் காலத்தின் கொடுங்கனவுகள் கனிதலின் தீராத தத்தளிப்புகள் 512 பக்கங்களில் ஒரு நவகாவியம் ரூ.480/-

மஜீத் கவிதைகள்

மஜித் முன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச்சுறுத்தலாக வெடிக்கத்தொடங்கிவிட்டன. ரூ.150/-

பொருளற்ற ​சொற்கள்

ஆசிரியர்: ராஜ்குமார் ஸ்தபதி மண் மக்கள் மொழி மானம் மயிறு எல்லாம் இழந்து சொரனையற்று தோல் தடித்து இனாம் இலவசத்திற்காக உங்களுக்கு முன் வரிசையில் நிற்கையில் எழுதிய கவிதைகள் ரூ.50/-