சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமும்

சுஜாதா பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-‘லாஸ்ட் டச் வித் டமில் யார்’-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல். சிலப்பதிகாரத்தைப் படித்தபோது எனக்கு மிஞ்சிய ஒரு மகா வியப்பு. அதன் காலத்தைக் கடந்த நவீனம், Contemporaneity இன்றும் புதிதாக இருக்கும் கதையும் கதை சொல்லும் முறையும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடிந்தால் இந்த எளிய உரையின் பயன் கிட்டியதாகச் சொல்வேன். ரூ.300/-

புறநானூறு ஓர் எளிய அறிமுகம்

சுஜாதா தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீனத் தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். முதல் தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல் இப்போது நானூறு பாடல்களுக்குமான விளக்கத்துடன் முழுத் தொகுதியாக வெளிவருகிறது. சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளியைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது. ரூ.330/-

இன்னும் சில சிந்தனைகள்

சுஜாதா தன் அன்றாட அனுபவங்களிலிருந்தும் வாசிப்பிலிருந்தும் சுஜாதா நம்மிடையே உருவாக்கும் மனப்பதிவுகள் சுவாரஸ்யம் நிறைந்தவை. புதிய கேள்விகளை எழுப்புபவை. தமிழ் வாழ்வின் அபத்தங்கள் சுஜாதாவின் இக்கட்டுரைகளில் தொடர்ந்து எதிர்கொள்ளப்படுகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த ஓராண்டில் சுஜாதா அம்பலம் இணைய இதழில் எழுதி இப்போது முதன் முறையாக நூல் வடிவம் பெறுகின்றன. ரூ.115/-

தமிழ் அன்றும் இன்றும்

சுஜாதா சுஜாதா 2003-2004 காலப்பகுதியில் அம்பலம் இணைய இதழில் ஓரிரு எண்ணங்கள் என்ற தலைப்பில் எழுதிய இக்கட்டுரைகள் முதன்முதலாக அச்சில் வெளிவருகின்றன. தமிழ்க் கணினி, புறநானூறு, பிரபந்தம், ஸ்ரீரங்கம், தமிழ் சினிமா முதலானவை குறித்த கட்டுரைகளும் சமீபத்தில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சுஜாதா அளித்த பதில்களும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ரசிகமணி டி.கே.சி, சாவி, பி.வி.பார்த்தசாரதி, புத்தகப் பித்தன், மௌனி குறித்த நினைவுகள், பார்வைகள் இத்தொகுப்பிற்கு வளம் சேர்க்கின்றன. ரூ.145/-

கடவுள்களின் பள்ளத்தாக்கு

சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எத்தொகுப்பிலும் இதுவரை இடம்பெறாத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை, எனப் பல்வேறு தளங்களில் விரியும் இக்கட்டுரைகள் சுஜாதாவுக்கே உரித்தான கூர்மையான நோக்குடனும் அங்கதத்துடனும் எழுதப்பட்டுள்ளன. மனதில் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்களை வரையும் Ôபெண்களுக்கு நானும்Õ கட்டுரையிலிருந்து பரவலான விவாதங்களை எழுப்பிய ‘பில்கேட்ஸ் விரித்த டாலர் வலை’ வரை பல்வேறு தொனிகளைக் கொண்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ரூ.165/-

எழுத்தும் வாழ்க்கையும்

சுஜாதா இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் அம்பலம் இணைய இதழில் வெளிவந்தவை. இணையத்தில் இக்கட்டுரைகள் சாஸ்வதம் பெற்று இன்றும் தேடிச் செல்பவருக்குக் கிடைக்கின்றன. இருந்தும் இக்கட்டுரைகளின் புத்தக வடிவத்திற்கு ஒரு தேவை இருப்பது, இணையம் எந்த நாளும் அச்சிட்ட புத்தகத்தை இடம் பெயர்க்க முடியாது என்பதைத்தான் காட்டுகிறது. ரூ.120/-

உயிரின் ரகசியம்

சுஜாதா மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால் ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும் வேதாந்திகளும் செய்யும் முயற்சிகளைத் தொகுத்துத் தந்து அவைகளிலிருந்து கிடைக்கும் முடிவுகளை படிப்பவருக்கே விட்டுவிடும் நோக்கத்தில் எழுதப்பட்டது இந்த நூல். ரூ.60/-

60 அமெரிக்க நாட்கள்

சுஜாதா சுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் நூல் இது. ரூ.65/-

நானோ டெக்னாலஜி

சுஜாதா நானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் சாத்தியங்களைக் காட்டுகிறது. தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள், வயசாவதைத் தாமதப்படுத்தும் நவீன அம்ருத கலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் எது நிகழும், எது மிகை என்பதையும் நாம் அறியவேண்டும். இந்தப் புதிய தொழில்நுட்பம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் சதா மெகா சீரியல் அரை மயக்க நிலையிலும் நடிகைகளின் இடுப்பளவிலும்தான் ஆழ்ந்திருப்பீர்கள். உலகம் நம்மைப் புறக்கணித்துவிட்டு எங்கோ ஓடிப்போய்விடும். ரூ.35/-

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்

சுஜாதா இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விரிவான உதாரணங்களுடன் பதிலளிக்கிறது இந்த நூல். ஹைக்கூ என்ற இலக்கிய வடிவத்தினூடே அதன் ஆழமான வாழ்வியல் நோக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறார் சுஜாதா ரூ.50/-