கணையாழி கடைசிப் பக்கம்

சுஜாதா சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் ‘நீர்க்குமிழிகள்’, ‘பெட்டி’, ‘கடைசிப்பக்கங்கள்’ எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது. ரூ.460/-

கண்ணீரில்லாமல்

சுஜாதா உயிர்மை இதழ் துவங்கப்பட்டபோது அதில் சுஜாதா ‘கண்ணீரில்லாமல் . . .’ என்ற தலைப்பில் சிக்கலான விஷயங்களை எளிதில் விளக்கக்கூடிய ஒரு தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இத்தொடரில் இத்தொடரில் யாப்பு, சங்ககாலம், காப்பியங்கள், சித்தர்கள், தனிப்பாடல்கள், மேற்கத்திய இசை, கணினித் தமிழ், திரைக்கதை, கிரிக்கெட், க்வாண்டம் இயற்பியல், கர்நாடக சங்கீதம், ஜென் போன்ற பல விஷயங்களை பற்றி எழுதவேண்டும் என்பது அவர் கனவு. ஆங்கிலத்தில் இத்தகைய மிக நேர்த்தியாக எழுதப்பட்ட எளிய அறிமுக நூல்கள் ஏராளமாகக் கிடைக் கின்றன. தமிழில் அத்தகைய சில நூல்களை எழுதவேண்டு மென்பதே அவரது கனவு. ஆனால் இந்தத் தொடர் உயிர்மையின் இதழ்களில் வெளிவந்து பிறகு தற்செயலான காரணங்களால் நின்று போனது. சுஜாதாவின் மறைவிற்குப் பின் இப்போது இந்தத் தொடரில் வெளிவந்த இக்கட்டுரைகள் முதன்முதலாக நூல் வடிவம் பெறுகின்றன. அவரது பரந்துபட்ட அக்கறைகளுக்கு இன்னொரு சாட்சியம் இந்த நூல். ரூ.30/-

கடவுள்

சுஜாதா இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது. அறிவியலுக்கும்நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமானசிந்தனைகளுக்கு இட்டுச் செல்கிறது. ரூ.230/-

சில்வியா

சுஜாதா சில்வியா குறுநாவலும் ஏழு புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ளும் பாங்கும், வாழ்வின் வினோதங்கள், அபத்தங்கள் குறித்த சித்திரங்களும் நிறைந்தவை இக்கதைகள். ரூ.90/-

சுஜாதாவின் மர்மக் கதைகள்

சுஜாதா சுஜாதாவின் சிறுகதைகளில் குற்றத்தையும் மர்மத்தையும் பின்புலமாகக் கொண்டு எழுதிய அனைத்துக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை வெறுமனே வாசக சுவாரசியத்திற்காக எழுதப்பட்ட திகில் கதைகள் அல்ல. மனித அந்தரங்கத்தின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் குற்றத்திற்கான தீராத வேட்கையை இக்கதைகள் பேசுகின்றன. முன் தீர்மானிக்க முடியாத மர்மத்தின் ரகசிய வழிகளைத் தனது சாகச நடையில் சுஜாதா தொடர்ந்து உருவாக்குகிறார். ரூ.230/-

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)

சுஜாதா சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், வினோதங்கள், சமூகச் சீரழிவுகள் எனப் பல்வேறு தளங்களில் இக்கதைகள் சஞ்சரிக்கின்றன. எழுதப்பட்ட காலத்திலிருந்து சுஜாதாவின் வாசகர்களின் நினைவுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ‘பாலம்’, ‘குதிரை’ ‘ஒரு இலட்சம் புத்தகங்கள்’, ‘இரு கடிதங்கள்’, ‘தனிமை கொண்டு’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ரூ.440/-

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)

சுஜாதா சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய ‘நகரம்’, ‘பார்வை’, ‘ரேணுகா’, ‘எல்டொராடோ’, ‘கால்கள்’, ‘தீவுகள் கரையேறுகின்றன’ உள்ளிட்ட பல முக்கியக் கதைகள் அடங்கியது இத்தொகுப்பு. வாழ்வின் சில ஆதார குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச் செல்லும் இக்கதைகள் காலமாற்றத்தால் புதுமை குன்றாதவை. ரூ.400/-

விஞ்ஞானச் சிறுகதைகள்

சுஜாதா கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன் முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின் முன்னோடியான சுஜாதாவின் இப்படைப்புகளில் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிவியலும் புனைவும் யதார்த்தமும் கனவும் கலந்து மயங்குகின்றன. கால மாற்றத்தால் புதுமை குன்றாத இக்கதைகள் வாசகர்களின் மனதில் தீராத வினோதங்களைப் படைக்கின்றன. ரூ.340/-

ஸ்ரீரங்கத்து கதைகள்

சுஜாதா ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண்டு உலகங்களுக்கிடையே அலைக்கழியும் ஒரு வாழ்க்கை முறையினை விவரிக்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சுஜாதாவின் துல்லியமான சித்தரிப்பு முறையினால் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் உயிர்பெற்று எழச் செய்கின்றன. ரூ.300/-

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-3

  சுஜாதா சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் வேறு சில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சமகால மத்தியதர வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கதைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உருவாக்கின. அபூர்வமான கதைசொல்லும் முறை, மின்னலைப் போல் வெட்டிச் செல்லும் நடை, அசலான மனிதர்களை மறுபடைப்புச் செய்யும் நுட்பம் ஆகியவற்றால் இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை மொழிக்கு பெரிதும் வளம் சேர்த்தவை. ரூ.320/-