தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

என். ராமகிருஷ்ணன் தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்ககால வரலாறு(1917 – 1964வரை)ஏற்கெனவே வெளியாகியது.இதன் தொடர்ச்சியாக கடந்த50ஆண்டுகால இயக்க வரலாறு ஏராளமான விவரங்களுடன் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1970களில் நடைபெற்ற வீரம் செறிந்த சென்னை தொழிலாளர்களின் போராட்டம்,திருச்சி சிம்கோ மீட்டர்ஸ் போராட்டம்,மலைவாழ் மக்கள் போராட்டம்,வால்பாறை வீர காடவியம்,பரம்பிகுளம் ஆழியாறு தொழிலாளர் போராட்டம்,கொடியங்குளம்,வாச்சாத்தி,சிதம்பரம்,சின்னாம்பதி,என நூற்றுக்கணக்கான போராட்டங்களின் வரலாறு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. ரூ.500/-

சாதி அரசியல் அதிகாரம்

கௌதம சித்தார்த்தன் தற்கால சாதியம்,இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன.இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல். ரூ.100/-

ரஷ்யப் புரட்சி

வி.பி.சிந்தன் புரட்சிகரமான கட்டுப்பாடு மிக்க கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கும்,புரட்சியின் பாதையை வரையறுத்து நிர்ணயிப்பதற்கும்,புரட்சிகர சித்தாந்தங்களை சிதைத்தும்,திரித்தும்,குலைத்தும் குளறுபடி செய்யாமல் இருப்பதற்கும் எப்படி போராட வேண்டும் என்று லெனின் காட்டிய வழியை அறிந்து கொள்ள,இந்நூலில் எளிமையாக கூறப்பட்டுள்ளது. ரூ.50/-

கம்யூனிஸ்ட் அறிக்கை(மார்க்ஸ்-ஏங்கல்ஸ்)

மார்க்ஸ்,எங்கெல்ஸ் அறிவர்ந்த உலகில் அதிகமாக படிக்கப் பெற்ற,விரித்துரைக்கப் பெற்ற நூல் கம்யூனிஸ்ட் அறிக்கை. 1848ஆம் ஆண்டில் இந்த அறிக்கை பேருண்மைகளை விளக்கும் பிரகடனமாகவே வெளியிடப்பட்டது. ரூ.25/-

சிலந்தியும் ஈயும்

வில்ஹெல்ம் லீப்னெஹட் லீப்நெஹ்ட்( 1826_-1900 )ஜெர்மானியத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஒரு பெயர் என்றார் லெனின்.இத்தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தோடு அவர் பேசிய உரை இந்நூலாக வந்துள்ளது.ஈக்களை தன் வலைப் பின்னலில் விழ வைத்துப் பின் அவற்றைக் கொலைவெறியோடு உண்டு புசிக்கும் கொழுத்த சிலந்தியை முன் வைத்து பாட்டாளிகளுக்கு நீங்கள்தான் அந்த ஈக்கள்,உங்கள் ஆண்டைகளும் முதலாளிகளும் தரகு முதலாளிகளும்தான் அந்தச் சிலந்திகள் என்று புரிய வைக்கிறார்.சிலந்திகள் பின்னும் சிக்கலான வலைகளுக்குள் மாட்டிக் கொண்டு விதியை நோவதற்கு மாறாக எண்ணிக்கையில் அதிகமான ஈக்களெல்லாம் ஒன்றாக முடிவெடுத்தால் தங்கலின் சிறகசைப்பில் எத்தனை சிக்கலான வலைப் பின்னல்களையும் அறுத்தெறிந்து விடுதலை பெற முடியும் என்பதை ஆவேசத்துடன் விளக்கும் புத்தகம். ரூ.10/-

கார்-ஆ?பேருந்தா?

பேரா.மணி கார்களின் எண்ணிக்கை பெருக அரசின் கார்களுக்கு ஆதரவான கொள்கையும் வரி குறைப்பும் கார் தொழிலுக்கு வட்டி குறைப்பும் எளிய தவணைகளில் கார் கடன் வழங்குவதும் முக்கிய காரணங்களாகும்.கார் பெருக்கத்தால் காற்று மாசு படுவது அதிகரிக்கிறது.போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.எரிபொருள் மூலாதாரங்கள் அதிவேகமாகக் காலியாகின்றன.நகர்ப்புறத்தை அண்டி வாழும் ஏழை எளிய மக்கள் ஒரு நாளின் பெரும் பகுதி நேரத்தை வாகனங்களுக்குக் காத்திருப்பதிலேயே செலவிட வேண்டிய நிலை.கார்களின் பெருக்கத்துக்கு மத்திய தர வர்க்கத்தின் ஆடம்பர கௌரவ மோகமும் ஒரு முக்கிய காரணமாகும்.ஆகவே காரா பேருந்தா என்னும் கேள்வியில் ஒரு வர்க்கப் போராட்டமே அடங்கியுள்ளது.” ரூ.10/-

மார்க்சியத்தின் எதிர்காலம்

பிரபாத் பட்நாயக் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்கிற கூக்குரல் காலந்தோறும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.ஆனால் மனித குல விடுதலையே மார்க்சியத்தின் அடிப்படை நோக்கம் என்னும்போது அது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை.அதற்கு முற்றிலும் வேறொரு சோசலிச சமூகம் அவசியமாகிறது.சோசலிசம் என்னும் அமைப்பில்தான் சமூக நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் இருக்கும் எண்ணங்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையில் ஒத்திசைவு இருக்கும்.ஆனால் பிரச்னை எங்கே வருகிறது எனில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை எங்கனம் புரிந்து கொள்வது?ஒன்றை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.மார்க்சியம் என்பது உறைந்து-போன உடலாக இருக்கும் கருத்துக்கள் அல்ல.மார்க்சியம் என்பது அதன் மூலக்கருவைச் சுற்றி காலத்துக்கு ஏற்றாற் போல அதன் ஸ்தூலமான நிலைமையை தீர்க்கமாக ஆய்ந்து தொடர்ந்து மறுசீரமைக்கப்படும் கருத்துப் பெட்டகமாகும்.இந்த மறு சீரமைப்பு சோவியத் யூனியனும் இதர பல சோசலிச நாடுகளும் சிதைந்து போன பின்னணியில் மூலதனத்தின் ஆதிக்கம் புதிய ரூபங்களை எடுத்துள்ள இன்றைய காலத்தில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கான விடையாக இந்நூல் வந்துள்ளது. ரூ.10/-