ஹரிஸ் ஹார்மன் தமிழில்: மு.வசந்தகுமார், நிழல்வண்ணன் மனித சமூகத்தின் வரலாற்றை வரலாற்று ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சொல்லும் சுவையான நூல். ரூ.1100
பாமா அடித்தட்டு மக்களின் கிராமியம் கமழும் சிறுகதைகளின் தொகுப்பு. ரூ.170/-
பாமா சிறுகதைகளின் தொகுப்பு. எளிய மக்களின் வலிகளைச் சொல்லும் சமூகக் கதைகள். ரூ.100/-
ஆசிரியர்: விபூதிபூசன் வந்த்யோபாத்யாய வனம் எப்படி நகரமயமாகிறது என்பதை விவரிக்கும் மேற்கு வங்கக் கதை. நம் கண் முன்னாலேயே நமக்குத் தெரியாமல் காடு எப்படி காணாமல் போகிறது என்பதை மிக இயல்பாக விவரிக்கிறது. ரூ.170/-
சுனிதிகுமார் கோஷ் ரூ.350.00 இந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் இது
சத்நாம் தமிழில்: பிரசன்னா பஸ்தர் காடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் அன்றாட வாழ்க்கையையும், அந்தக் காடுகளினூடே நான் பயணிக்கும்போது கண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் இந்நூல் விவரிக்கின்றது. ரூ.130/-
ஜான் பெர்க்கின்ஸ் தமிழில்: போப்பு “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”, ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது. ரூ.200/-
பெரியாரின் – பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் ‘இந்திய விடுதலை இயக்க’த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையமையாததொரு நூல். ரூ.450/-
பாஷா சிங் இந்தியாவில் மலம் அள்ளும் மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல். ரூ.350/-