அராபிய இரவுகளும் பகல்களும்

நாகிப் மாஃபஸ் தமிழில் : சா.தேவதாஸ் ‘நாகிப் மாஃபஸின்’ இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.

வடக்கேமுறி அலிமா

  கீரனூர் ஜாகிர்ராஜா  இந்த பிரதியல் ஏன் இத்தனை வீச்சமெடுக்கிறது என்று கேட்காதீர்கள். இந்தச்சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். ₹ 100.00

லைஃப் ஆஃப் பை

யான் மார்ட்டெல் தமிழில்: சின்னத்தம்பி முருகேசன் ”என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு? பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு? எல்லாமே மூழ்கிப் போச்சா? நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்டியது தானா? அது தான் முடிவுன்னா, பகுத்தறிவு என்பதற்கு என்ன நோக்கம். ரிச்சர்ட் பார்க்கர்? உணவு, உடை, உறையுள் இவற்றை அடைவதற்கு அப்பால் பகுத்தறிவு எத்ற்கும் பயன்படாதா? பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தால் என்ன? விடைபெற முடியாத கேள்விகளை எழுப்புகிற சக்தி மட்டும் எப்படி வந்தது? சிறிதளவு மீனைக் கூடப் பிடிக்காதென்றால், அவ்வளவு பெரிய வலை எதற்காக?”

ஆண்பால் பெண்பால்

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண் – பெண் பாகுபாடு போல இல்லை, மனிதர்களில் உள்ள பால் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துகள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி, எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு கையெழுத்து, குரல், சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். ஆண்பால் பெண்பால் நாவல் அந்த அற்புத முரண்பாட்டை படைப்பிலக்கியத்தின் வழியே அறிவியல் பூர்வமாகவும் உணர்த்துகிறது.

வனசாட்சி

இலங்கையின் மலைகளில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்கி அதற்கு எருவாகிப்போன தமிழ் மக்களின் கதை. ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்துக்குப் பிறகு அவர்களில் பாதி பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ரத்தம் கொதிக்கவைக்கும் அந்த தியாகச் சரித்திரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாவல். மலையிலும் கடலிலும் மறைந்துபோன அந்த தமிழர் உழைப்பை புனைவின் ஊடே பதிவு செய்திருக்கிறது இந்த நாவல். ரூ.260/-

தாரகை

தமிழ் அரசியலில் சூழலில் சினிமா ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. நடிகர்கள் இல்லாமல் கடந்த அரை நூற்றாண்டாக தமிழக அரசியல் இல்லை. ஓரிரு படங்கள் ஓடிவிட்டாலே நடிகர்கள் தங்களை தமிழகத்தை ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். தாரகை நாவலில் நாயகி தீபிகாவும் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலைவி ஆகிறாள். யாருமற்ற அனாதையாக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்துவைத்து, பாதையில் பயணத்து, அவள் அடையும் இடம்… வெற்றிடமா? வெற்றி மகுடமா? ரூ. 165/-

ஆபரேஷன் நோவா

தமிழில் அறிவியல் புனைகதைகள் அருகி வருகின்றன. எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு ஏறத்தாழ அறிவியல் புனைகதையில் தேக்கநிலை. ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த ஆபரேஷன் நோவா தொடர் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. டோபா எரிமலை வெடித்து பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரப் போவதை விஞ்ஞானிகள் அறிகிறார்கள். மக்களைக் காப்பாற்றும் பணியில் பல சிக்கல்கள். உயிரினம் வாழ உகந்த கோள் ஒன்றில் மனிதர்கள் வாழ வழிசெய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை எனத் தெரியவர, சயின்டிஸ்ட் ஒருவர் சாத்தான் உருவம் எடுக்கிறார். விறுவிறுப்பான் கதை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை, நாவலுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது. ரூ.160/-

அதிகாரம்

  எஸ். அர்ஷியா மனிதன், எப்போது தன்னைத்தானே விரும்பத் தொடங்குகிறானோ அப்போதே, அவனிடமிருந்து அன்பு, பாசம், பரிவு, நேசம், பச்சாதாபம், இணக்கம், இயைவு, உறவு உள்ளிட்டவை மெல்லமெல்ல விலகிக்கொள்கின்றன. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் அவன், அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக்கொள்கிறான்.. ரூ. 180/-

மானுடப் பண்ணை

தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பாகத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சினைகள் கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன. தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லடக்கணக்கான இளைஞர்களின் ‘சோக’ வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால். தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளன்குகிறது. ரூ.160/- உயிர்மை பதிப்பகம்