வரம்பு மீறிய பிரதிகள்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது. ரூ.170/-

குறுஞ்சாமிகளின் கதைகள்

கழனியூரன் குடும்ப வகையறா சார்ந்த குடும்ப தெய்வங்களும், இனக்குழு சார்ந்த சிறு தெய்வங்களும், தொழில் சார்ந்த குறுஞ்சாமிகளும், ஜாதிய அடிப்படையிலான சாமிகளும் ‘ஜனங்களின் சாமிகள்’ என்னும் பட்டியலில் அடங்குகின்றன. காதல் தோல்வி, தியாக வரலாறு, கலப்பு மணம் என்பன போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்பான கதையாடல்கள், இக்குறுஞ்சாமிகளின் பின்னணியில் உள்ளன. மானுடவியல், நாட்டாரியல், பண்பாட்டியியல் சார்ந்த ஆய்வுகளில் இக்குறுஞ்சாமிகளுக்கு முக்கிய இடம் உள்ளது. இக்குறுஞ்சாமிகளுக்குப் பின்னால் உள்ள வரலாறுகளைத் தோண்டிப் பார்த்தால் நமக்கு அரிய பல வாய் மொழி வரலாற்றுச் சான்றாதாரங்களும் அழகிய பல நாட்டார் கதையாடல்களும் காணக்கிடைக்கின்றன. ரூ.80/-

உயிரின் ரகசியம்

சுஜாதா மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால் ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும் வேதாந்திகளும் செய்யும் முயற்சிகளைத் தொகுத்துத் தந்து அவைகளிலிருந்து கிடைக்கும் முடிவுகளை படிப்பவருக்கே விட்டுவிடும் நோக்கத்தில் எழுதப்பட்டது இந்த நூல். ரூ.60/-

காற்றில் யாரோ நடக்கிறார்கள்

எஸ். ராமகிருஷ்ணன் என் கட்டுரைகள் எளிமையானவை. அவை ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் என்ற முறையில் என் மனதின் பிரதிபலிப்புகளை, நான் உள்வாங்கிக் கொண்ட விஷயங்களை முன்வைக்கின்றன. ஆனால் இவை வெறும் ரசனையின் பிரதிபலிப்புகள் மட்டுமில்லை. அதைத் தாண்டிய தளங்களை கவனத்திற்கு உட்படுத்துகின்றன. என் தனிமையைப் பகிர்ந்து கொண்ட இந்தப் புத்தகங்கள், சினிமா, இசை போன்றவை உங்களுக்குள் நிரம்பியுள்ள தனிமையையும் போக்கக்கூடும் என்ற பகிர்தலே இந்தக் கட்டுரைகளின் அடிப்படை. இதில் பெரும்பான்மை என் இணையத் தளத்தில் வெளியானவை. அத்தோடு கல்குதிரை, கணையாழி, அட்சரம் போன்ற இலக்கிய இதழ்களிலும், விகடன், குமுதம், தினமணி, சண்டே இந்தியன் போன்ற வார இதழ்களிலும் வெளியானவை. ரூ.200/-

அதே இரவு அதே வரிகள்

எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய அட்சரம் இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்தெடுத்த தொகை நூல் இது. நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், நோபல் பரிசு ஏற்புரைகள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கதைகள் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹே, குந்தர் கிராஸ், மிலாராட் பாவிக், மிலன் குந்தேரா, காப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, மாபௌஸ், ஜோசே சரமாகோ, கென்சுபரோ ஒயி, ஏ.கே.ராமானுஜம் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பின் வழியே உருவாகும் படைப்பனுபவமும் கருத்தாக்கங்களும் மிகுந்த மன எழுச்சியை உருவாக்குகிறது. உலக இலக்கியத்தின் ஆதாரமான சுருதியை கோடிட்டுக் காட்டுகிறது. ரூ.150/-

Default Title

ச. தமிழ்ச் செல்வன் தமிழ்ச் செல்வனின் இக்கட்டுரைகள் இதயத்தின் அடியாழத்தில் உறைந்த நினைவுகளை மீட்பவை. அந்தரங்கத்தின் அறைகளை திறப்பவை. கடக்க முடியாத குற்ற உணர்வும், கடக்க முடியாத துயரமும் இக்கட்டுரைகளை ரகசிய விசும்பல்களாகவும் ஒரு ரணத்தை அந்தரங்கமாக திறந்து பார்க்கும் செயலாகவும் மாற்றுகின்றன. ரூ.80/-  

நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை

யமுனா ராஜேந்திரன் பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கமாகப் பின்நவீனத்துவத்தைக் காணும் அமெரிக்க மார்க்சியரான பிரெடரிக் ஜேம்ஸன், அழகியல் குறித்த கருத்தியல் சர்ச்சைகளைப் பின்நவீனத்துவத்திற்கு எதிரான விமர்சனமாகக் காணும் அயர்லாந்த கலாச்சார மார்க்சியரான டெரி ஈகிள்டன், சோஷலிச ஜனநாயகமும் மேலாண்மையும் குறித்து பின் சோவியத் பின்னணியில் பேசும் அர்ஜென்டீன இடதுசாரியான எர்னஸ்ட் லக்லாவ், அடையாள அரசியல் மற்றும் தேசியம் குறித்துத் தீவிர விமர்சனங்கள் கொண்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டாளர் அய்ஜஸ் அஹமது. வித்தியாச அரசியலின் நெருக்கடி குறித்துப் பேசும் வெகுஜனக் கலை விமர்சகரான ஆப்பிரிக்கக் கல்வியாளர் ஸ்டுவர்ட் ஹால், பின்நவீனத்துவத்தின் கலாச்சாரச் சார்புவாதம் மற்றும் அதனது போலி விஞ்ஞானக் கோருதல்களை விமர்சிக்கும் பௌதிகவியலாளரும் அமெரிக்க மார்க்சியருமான அலன் ஸாக்கல், பிரெஞ்சுச் சமூகவியலாளரும் இடதுசாரிக் கோட்பாட்டாளருமான காலஞ்சென்ற பியர்ரோ போர்தியோ போன்றோரது விரிவான நேர்முகங்களைக் கொண்டதாக இந்நூல் விரிகிறது. பின் நவீனத்துவத்தை அதனது வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் இந்த நூல், மார்க்சியத்திற்கும் பின் நவீனத்துவத்திற்கும் தேசியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையில் கடந்த இருபது ஆண்டுகளாக நடந்து வந்திருக்கும் கோட்பாட்டுச் சர்ச்சைகளைத் தொகுத்துத் தருகிறது. ரூ.140/-

அரசியல் இஸ்லாம்

யமுனா ராஜேந்திரன் ‘குரான்’ மற்றும் ‘ஹதித்’ எனும் இரு இஸ்லாமியப் பிரதிகளின் அடிப்படையில் நவீன காலத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என அரசியல் இஸ்லாம் கருதுகிறது. அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைப்பாடுகள் என்பதுதான் என்ன? அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது? அரசியல் பயங்கரவாதம் ஒரு புறம், ஏகாதிபத்திய அரச பயங்கரவாதம் மறுபுறம், இதனிடையில் சிக்குண்ட மக்களாக, மௌன சாட்சிகளான இஸ்லாமிய வெகுமக்கள். சிக்கலான இந்தச் சூழலில் வைத்து அரசியல் இஸ்லாமின் திட்டங்களைப் புரிந்துகொள்ள இந்த நூல் முயல்கிறது. இந்தியச் சூழலிலும் அரசியல் இஸ்லாம் தொடர்பாக மார்க்சியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியான கேள்விகள் குறித்து இந்நூலில் பேசுகிறார் யமுனா ராஜேந்திரன் ரூ.180/-

60 அமெரிக்க நாட்கள்

சுஜாதா சுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் நூல் இது. ரூ.65/-

நானோ டெக்னாலஜி

சுஜாதா நானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் சாத்தியங்களைக் காட்டுகிறது. தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள், வயசாவதைத் தாமதப்படுத்தும் நவீன அம்ருத கலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் எது நிகழும், எது மிகை என்பதையும் நாம் அறியவேண்டும். இந்தப் புதிய தொழில்நுட்பம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் சதா மெகா சீரியல் அரை மயக்க நிலையிலும் நடிகைகளின் இடுப்பளவிலும்தான் ஆழ்ந்திருப்பீர்கள். உலகம் நம்மைப் புறக்கணித்துவிட்டு எங்கோ ஓடிப்போய்விடும். ரூ.35/-