பொய்த் தேவு

நான் அளவுக்கு அதிகமாக சிரமம் எடுத்துக்-கொண்டு எழுதிய நாவல் பொய்த் தேவு. பொருள் சம்பாதிக்கவே தவம் இருந்து, அதைச் சாதிக்கிற சக்தியும் இருக்-கிற இடத்தில், எல்லாவற்றையும் பொசுக்-கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக் கூடிய மனோ-பாவமும் இருக்கும் என்பது நான் கண்டறிந்த உண்மை. பொருள் என்று மட்டுமல்ல, மனிதன் ஏற்றுக் கொள்கிற எல்லா லட்சியங்-களையும் இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பது-தான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை. – க.நா. சுப்ரமண்யம் ரூ.180/-

கடல்புரத்தில்

கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு. மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது ‘அன்பு வழி’ யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன். வண்ணநிலவன் ரூ.100/-

கரைந்த நிழல்கள்

கரைந்த நிழல்கள்’ நாவலில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு முன்மாதிரி உண்டு. ஆனால் அந்தப் பாத்திரங்கள்தான் அந்த முன்மாதிரியல்ல. அதாவது பல தகவல்களில் பாத்திரங்களும் முன்மாதிரிகளும் பெரிதும் மாறுபட்டு இருக்கும். பல படமுதலாளிகளின் கலவை ரெட்டியார். அதேபோல பல ஸ்டுடியோ முதலாளிகளின் கலவை ராம ஐயங்கார். பல புரொடக்ஷன் மானேஜர்களின் கலவை நடராஜன். ஆனால் இந்த நாவலில் அந்த ஸ்டுடியோவும் சினிமாவும் அவ்வளவு முக்கியமல்ல. இது மனிதர்களைப் பற்றியது. உண்மையாக இருக்கக்கூடிய மனிதர்களைப் பற்றி ஓர் அந்தரங்கத்தோடு ஓர் உரிமையோடு எழுதப்பட்டது என்பதுதான் முக்கியம். பிற்காலத்தில் இது ஒரு நல்ல நாவல் என்றில்லாமல் இது சினிமாத் துறை பற்றிய ஒரு நல்ல நாவல் என்று கூறப்படுமானால் நான் தோல்வியடைந்தவனாவேன். அசோகமித்திரன் ரூ.120/-

ப.சிங்காரம் நாவல்கள்

தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. புயலிலே ஒரு தோணி கடலுக்கு அப்பால் ரூ.290/- (இரண்டு நாவல்கள்)

சாயாவனம்

சா.கந்தசாமி ‘சாயாவனம்’ ஓர் அபூர்வமான நாவல், தமிழ் படைப்பிலக்கியத்தில் ஒரு மைல்கல். நடை புதுமையானது. ஆனால் பரிசுத்தம் தோன்ற இருப்பது. முதலில் ஒரு கதை சொல்வதுபோல் தொடங்குகிறது கந்தசாமியின் உரைநடை. காலதாமதமே செய்யாமல் வனம் அழிப்புப் பகுதி வந்தடைந்தவுடன், ரசம் மிகுந்த நீண்ட கவிதையாக உருமாறுகிறது. ரூ.160/-

தண்ணீர்

அசோகமித்திரன் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற, அமர சிருஷ்டிகள் என்பேன். இந்த இரண்டு நாவல்களையும்போல், இப்போது அவரால்கூட எழுதமுடியாது என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவரை உலக இலக்கியத்தில் குறிப்பாக ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில்தான் இதுபோன்ற படைப்புகள் தென்படுகின்றன. ரஷ்ய இலக்கியத்தில் இதுபோல் கதை சொல்பவர்கள் குப்ரினும், செகாவும். ரூ.100/-

புத்ர

இந்நாவல் வெறும் கதையாக மட்டும் கருதப்படாமல் இதில் எங்கேனும் ஓர் இடத்தில் தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய், படிப்பவர் நெஞ்சை ஒரு தருணமேனும் இது மீட்டிவிட்டால், என் ஆசை வீண் போகாது. – லா.ச. ராமாமிருதம் ரூ.140/-

சட்டி சுட்டது

ஆர்.ஷண்முகசுந்தரம் ஷண்முகசுந்தரம், காந்தியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வாழ்நாள் முழுக்க அக்கொள்கைகளையே பின்பற்றி வந்தவர். அவருடைய நாவல்களில் காந்தியக் கருத்துகளை வலியுறுத்தியதும் உண்டு. ‘சட்டி சுட்டது’ நாவல் காந்தியத்தில் ஊறிய மனம் ஒன்றின் படைப்பு வெளிப்பாடு எனக் கொள்ளத்தகும். ரூ.150/-

நாகம்மாள்

ஆர்.ஷண்முகசுந்தரம் நான் படித்துள்ள வரையில் பூரணப்பொலிவுடன் கலையம்சங்கள் சிறந்த ஒரு கிராமிய நாவல் என்று ஸ்ரீ ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளைத்தான் சொல்ல வேண்டும். கொங்கு நாட்டுக் கிராமத்து வாழ்க்கை அந்த நாவலிலே அப்படியே உருவம் பெற்றிருக்கிறது. அந்த வாழ்க்கையைப் போலவே ஷண்முகசுந்தரத்தின் நடையும் கொங்குநாட்டு மணத்தை அள்ளி வீசுகிறது. ஒரு சிறு நாவல் இது. கதையென்று சொல்லும்படியாகப் பெரிதாக ஒன்றுமில்லை. உள்ள வரையில் வெகுமிடுக்காக, நேராக நடக்கிறது. இந்த நாவலிலே வந்து நடமாடுகிற உயிருள்ள பாத்திரங்களும், அவர்கள் பேசுகிற உயிருள்ள தமிழும்தான் முக்கியம். இந்த இரண்டிலும் ஷண்முகசுந்தரத்தினளவு தமிழ் நாவலில் வெற்றி கண்டவர்கள் வேறு யாருமில்லை என்பது என் அபிப்பிராயம். ரூ.120/-

நாய்கள்

ஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். நகுலன் ரூ.75/-