காஃப்கா எழுதாத கடிதம்
August 13, 2016
எஸ். ராமகிருஷ்ணன்
புத்தகங்களும் பயணங்களுமே எனது இரண்டு சிறகுகள். இதன்வழியே நான் அடைந்த அனுபவங்கள் மகத்தானவை. உலக இலக்கிய ஆளுமைகளையும் அவர்களின் முக்கிய நூல்களையும் குறித்து தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன். அந்த வரிசையில் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரேமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே ,வியோலெட் லெடுக், செல்மா லாகர்லெவ் போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூலிது. ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும் என பைபிளில் ஒரு வரி இடம்பெற்றிருக்கிறது. அது மரத்திற்கு மட்டுமானதில்லை, எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடியதுதானே.
ரூ.200/-
No Comments