சுஜாதா திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்கும். எளிய படிவம்தான். சில கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஒரு வார்த்தை விடைகள். இந்தப் படிவமே திரைக்கதையல்ல. அதற்கு முந்தைய எழுத்துThe writing before the writing. இந்தப் படிவத்தை நிரப்பிவிட்டால் திரைக்கதை எழுதுவது உங்களுக்கு எளிதாகிவிடும். அதைவிட முக்கியம் தொடர்ந்து திரைக்கதையாக எழுதலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கவும் இந்தப் படிவம் உதவும். இது திரைக்கதை மாணவர்களுக்குமட்டும் அல்ல, பல திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களுக்கும் உதவும். இதை நிரப்பும்போது தயாரிப்பாளர்களுக்குப் படத்தைப் பற்றித் தெளிவான ஐடியா கிடைக்கும். சுஜாதா ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ என்னும் நூலைத் தொடர்ந்து எழுதியுள்ள இந்த நூல் திரைக்கதை எழுதிப் பார்ப்பதற்கு அத்தியாவசியமான ஆதார வடிவத்தை வழங்குகிறது. திரைக்கதைக் கலை, கருத்தாக்கம், பாத்திரப்படைப்பு, உறவுகள், கதை அமைப்பு, கதைச் சம்பவங்கள், கதா பாத்திர வரைபடம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலில் ஐந்து திரைக்கதைகளை எழுதிப் பார்ப்பதற்காக பயிற்சிப் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுஜாதாவின் வசீகரமான நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் திரைப்படக் கலை குறித்த மிகச் சிறந்த கையேடாகத் திகழ்கிறது. தமிழில் இத்தகைய ஒரு கையேடு வெளிவருவது இதுவே முதல் முறை. ரூ.130/- Tags: உயிர்மை, சுஜாதா, திரைப்படக் கலை
No Comments