விண்மீன்களின் வகை வடிவம் வரலாறு

த.வி.வெங்கடேஸ்வரன் தமிழில் வானியல் பற்றி விரிவான அளவில் எளிமையாக வரும் முதல் நூல்.கோள்கள் பற்றி அவற்றின் அமைப்பு,இயக்கம்,வரலாறு பற்றி இதில் தெளிவாக சொல்லப்படுகிறது-.சில செய்முறைகளும் தரப்பட்டுள்ளன.இந்நூல் பிரபஞ்சம் பற்றிய மறை திறவுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ரூ.160/-

கண்டோம் கடவுள் துகளை

த.வி.வெங்கடேஸ்வரன் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை எப்படி செய்தார்கள்? ஹிக்ஸ் போஸான் என்பது என்ன? ஸ்டாண்டர்ட் மாடல் என்பது என்ன? இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? இதனை கடவுள் துகள் என கூறுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கம் தருவது தான் இச்சிறுநூல். ரூ.40/-

எனது நீலப் புவி கோளம்

ஹெர்மன் தித்தோவ் “இந்நூலில் சோவியத் விண்வெளிப் பயணி ஹெர்மன் ஸ்தெபானவிச் தித்தோவ் தம் பிள்ளைப் பருவத்தையும் வாலிபப் பருவத்தையும் உள்ளங்கவரும் விதத்தில் வருணிக்கிறார்.மேலும் தனது விண்வெளிப் பயண அனுபவத்தை பகிர்கிறார். ……..“கிளம்புக!’’குப்பென்று எரிந்த நெருப்பு,பழுப்புப் புகைப் படலங்கள்,தீப்புயல்,இவற்றோடு இடி போன்ற தடதடப்பு ஸ்தெப்பி வெளி நெடுகிலும் அதிர்ந்து ஒலித்தது.வெள்ளி நிற ராக்கெட்டு பனி அடர்களை உதறிப் போக்கி விட்டு,விருப்பம் இல்லாதது போல மெதுவாகச் செலுத்து மேடையை விட்டுக் கிளம்பியது.பூமிச் சிறையின் தளைகளை அறுப்பதற்கு ராக்கெட்டு இயந்திரங்களின் பல பத்து லட்சம் குதிரைத் திறன் கடுமையாக முயன்று பாடுபட்டதை ராக்கெட்டின் இடிமுழக்கத்தால் தரையோடு தரையாக நசுக்கப்பட்டிருந்த நாங்கள் அனேகமாக உடல்களால் உணர்ந்தோம்!……. “ ரூ.160/-

விண்வெளி 1000 வினா -விடைகள்

ஏற்காடு இளங்கோ நாம் வாழக் கூடிய சூரியக் குடும்பம் மிகப் பெரியது.ஆனால் பிரபஞ்சத்தில் ஒரு கடுகை விட மிகச் சிறியது தான்.பிரபஞ்சம் தொடர்ந்து விரிந்து கொண்டே இருக்கிறது.அதன் எல்லை இதுதான் என கற்பனையிலும் வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு மிகப்பெரியது.அப்படிப்பட்ட பிரமாண்ட தன்மை கொண்ட பிரபஞ்சம் பற்றி ஏற்படக்கூடிய ஆயிரம் கேள்விகளுக்கு1000விடைகளால் விளக்கம் அளிக்கிறது இந்நூல். ரூ.130/-

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு

பில்பிரைசன் தமிழில்:ப்ரவாஹன் “இந்நூலின் ஆரம்பகால ஆதிமனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களுக்காக அவர்19000கி.மீ.பயணம் செய்து17ஆகழ்வாராய்ச்சி பகுதிகளுக்கு நேரில் சென்று பதிவு செய்கிறார்.டார்வின் குறித்து எழுதிட காலோப்பாகஸ் தீவில் அவரைப் போலவே178நாட்கள் பயணிக்கிறார்.நியூட்டனை பற்றி எழுத கேம்பிரிட்ஜ் சென்று விவான்ஸ் எனும் வாழும் அறிஞரை பார்க்க ஆஸ்திரேலியா போகிறார்.கடல் உயிரி ஆராய்ச்சிக்காக மத்திய பசிபிக் என பதினெட்டு நாடுகள், 176அருங்காட்சியகங்கள், 1.7மில்லியன் ஆண்டு பழைய பெண் என ஒரு2000வாழும் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து தான் திரட்டியதை தன்பார்வையில் மெருகூட்டி தனக்கே உரிய நகை யதார்த்த நடையில் நம்முன் வைக்கிறார்.” ரூ.445/-

மனிதன் பறந்தான்

ஆத்மா கே.ரவி “பறவைகளைப் போல பறந்து திரிய மனிதன் துவக்கத்தில் செய்த முயற்சிகள் முதல் பிரபஞ்சத்துக்குள்ளே சீறிப்பாய்ந்து கொண்டு இருக்கும் ராக்கெட் சாதனைகள் வரை மனிதன் பறந்த கதைகளை பேசும் நூல்!” ரூ.40/-

பூமியின் கதை

ஆத்மா கே.ரவி “கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்த நமது பூமி என்னவாக இருந்தது?என்ன ஆகிக்கொண்டு இருக்கிறது?இந்த பூமியில் தோன்றிய உயிரிகளின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலையை பின்நோக்கி பார்க்கும் நூல்.” ரூ.60/-

நானோ யுகம்

ஆத்மா கே.ரவி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அணுக்களுக்குள்ளே ஆராயப் புகுந்து மனிதன் தற்போது அடைந்துள்ள நிலையே நானோயுகம்.சாத்தியமில்லாத பல விஷயங்களை சாத்தியமாக்க போகும் இந்த நானோ யுகப் புரட்சியைப் பற்றி விளக்குகிறது இந்நூல். ரூ.50/-

வரலாறு மறந்த விஞ்ஞானிகள்

ஆயிஷா இரா.நடராசன் “மனித சமூகம் புதிரானது.புவியின் புன்னகை விடுகதை போன்றது.சரித்திரம் இருக்கிறதே அதன் மௌனமான மர்மத்தின் முன் எத்தனையோ பலிகள்.தன் வாழ்நாளெல்லாம் அறிவியல் சோதனைகளில் ஈடுபட்டு அதன் பலனை எதிர்பார்க்காமல் மறைந்து போன பல சாதனை விஞ்ஞானிகள் பற்றி இந்நூல் விவரிக்கிறது.” ரூ.50/-

ஃபீனிக்ஸ் அறிவியல் நாடகங்கள்

ஆயிஷா இரா.நடராசன் “இன்று அறிவியல் என்பது வெறும் ஆய்வகங்களில் இல்லை.அவை தேசங்களில் மக்களின் வரிப்பணத்தை முழுங்கித் கொண்டிருக்கும் அறிவியல் திட்டங்களாக உள்ளன.இந்த அரசியல் உள்ளிட்ட பல அறிவியல் நாடகங்களை இத்தொகுப்பு முன்வைக்கிறது.” ரூ.50/-