புவியியலை புரிந்து கொள்வோம்

கேத்தரின் “பள்ளிக் கல்வியில் பல சுவையான இயல்கள் வேப்பங்காயாக மாறிவிடுகிறது.புவியியலும் அப்படிதான்.நமது இயல்பு வாழ்க்கையோடு பொருந்திய செய்திகள்தான் என்றாலும் பள்ளிப் பாடத்தில் இவை விளக்கும் விதம் மாணவரை விலகச் செய்துவிடுகிறது.புவியியல் செய்திகளை வெகு அழகாக,நேர்த்தியாக,எளிமையாக எல்லோரும் ருசிக்கும் விதமாக கேத்தரின் இந்நூலில் விளக்கி இருக்கிறார்.அழகு தமிழிலே ஆழமான செய்திகளை விளக்கும் திறமை இந்த நூலில் புலப்படுகிறது.அறிவியல் தமிழ் உலகம் பெற்றுள்ள புதுவரவு-கேத்தரின்.தமிழகத்தை குலுக்கிய சுனாமியில் துவங்கி புவியின் உள் அமைப்பை விளக்கி,சூரிய குடும்பத்தில் புவியின் இருப்பிடத்தை சுட்டி,புவியின் மீது கற்பனையாக தீட்டப்படும் அட்சரேகை,தீர்க்க ரேகையைக் கூறி புவியின் இடம்தோறும் காலம் வேறுபடும் என்பதை விளக்கியுள்ளார் கேத்தரின்.மேலும் காற்று,புயல்,மின்னல்,இடி போன்ற இயற்கை நிகழ்வுகளையும்,மண்,கனிவளம் முதலிய புவியியல் வளங்களையும் கூறியுள்ளார் இவர். “”பூமிக்குள் வெப்பம் மற்றும் அழுத்தம் அதிகரிக்கும்போது மாக்மா ஏதாவது ஒரு வழியில் வெளிவர முயல்கிறது. (நமது வீட்டு பிரஷர் குக்கர் மாதிரி)இதுவே எரிமலையாகிறது””என கேத்தரின் விளக்குவது அருமை.எளிமை நடைமுறை,இயல்பு வாழ்க்கை உவமைகள் வழியாக அறிவியலை விளக்குவது என்பது அறிவியல் பரப்புதலின் கோட்பாடு-அழகியல்.இந்த அழகியல் அருமையாக கேத்தரின் இந்த நூலில் எங்கும் காணக் கிடைக்கிறது.எனவேதான் இந்த நூலைப் படிக்கத் துவங்கினால் தொய்வு இன்றி வாசிக்க முடிகிறது. ‘வளம்’என்பதை பலரும் அரசியல் பார்வையில் பார்ப்பதில்லை.கேத்தரின் அவர்கள் வளம் என்பது என்ன என்பதை கேள்வி கேட்டு இன்று இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு வளர்ச்சி இன்றைய தொழில் வளர்ச்சியை சரியாக சாடுகிறார்.வேலைவாய்ப்புதான் இந்தியா போன்ற நாடுகளில் அடிப்படை வளர்ச்சி என்பதைச் சுட்டிக்காட்டும் அவர்””நாம் பயணம் செய்யும் பாதையை மாற்றிட வேண்டும்””எனவும் கூறுவது மெச்சத்தக்கது.த.வி.வெங்கடேஸ்வரன்” ரூ.30/-

உலக தொழில் நுட்ப முன்னோடிகள்

ஆயிஷா இரா.நடராசன் “உலகத்தொழில்நுட்ப முன்னோடிகள்” என்ற நூல் எழுத்தாளர் இரா.நடராசன் அவர்களால் எழுதப்பட்டு64பக்கங்களைக் கொண்ட12ஆளுமைகளைப் பற்றிய அற்புதமான நூல்.எல்லாப் பக்கங்களிலும் கூறப்பட்டுள்ள விவரங்கள் மாணவர் சமூகம் மட்டுமல்ல,விஞ்ஞானத் தொழில்நுட்பப் பயனாளிகள் கூட அறிந்து கொள்ளப்பட வேண்டியவைதான்.போர்டு என்கிற விஞ்ஞானியின் பெயரில் தார்சாலைகளில் ஓடுகின்ற கார் என்கிற வார்த்தைகள் சாலையைப் பற்றிய,கார் சக்கரமான டயர்பற்றிய,டயரின்தோல் பற்றிய புரிதல்களைப் பல நூற்றாண்டுகளில் எந்த எந்த நாடுகளில் இது போன்ற ஆய்வுகள் நடந்தன என்கிற வரலாற்றை(பக்- 6, 7)இரண்டு பக்கங்களில் ஆசிரியர் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.மேல்தட்டு மக்கள் மட்டுமே யோசிக்க முடியும் என்கிற நிலையிலிருந்து விவசாய மக்கள் வாங்கும் வகையில் போர்டு “கார்புரட்சி” நடத்தியுள்ளது சமூக முன்னேற்ற நடவடிக்கையாகும்.போர்டு எவ்வித புகழ்பெற்றாலும் எடிசனுக்கும் தனக்குள்ள உறவும் அற்புதமானது என்று போர்டு சொல்வது தோழமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். “சொல் உள்ளவர்கள் செல் உள்ளவர்களே” என்கிற வகையில் அதிநவீன புரட்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மொபைல் புரட்சியில் ஓர் அங்கமான மோட்டோ ரலா நிறுவனம் அதன் முதலீடு மற்றும் வீழ்ச்சி பற்றிய பொருளாதாரச் சிந்தனைகளை மாரட்டின் கூப்பர் என்கிற தலைப்பில் கொண்டு வந்துள்ளார்.அதிக எடை கொண்ட மொபைல்,ஒரு குறுகிய கால இடைவெளியில் எடை குறைவாய்க்கொண்டு வரப்பட்ட விஞ்ஞான முன்னேற்றம் ஆகியவை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் கூப்பர்தான் சூப்பர்மேன் என்பதை மொபைல் உபயோகிப்பாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.ஐப்பான் போரில் இருந்து மீண்டெழுந்த வரலாற்றின் நாயகன் ஆக்கியே மோரிடா என்பவரின் விபரமும் அவரது தளராத நடவடிக்கைகளும் நட்புக்கு அவர் தந்த மரியாதையும் போற்றப்பட வேண்டியவை. “பிஷீtவிணீவீறீ” என்கிற வசதியைப்பற்றிய வரலாறும்,ஸபீர் பாட்டியா என்பவரது விஞ்ஞான திலகத்திற்கு சிலை வைக்க வேண்டாம் காந்திக்குத்தான் சிலை வைக்க வேண்டும் என்று ஸபீர் கூறியிருப்பது அவரது அடக்கத்தை உணர்த்துகிறது.விஞ்ஞானி மார்கோனிதான் ரேடியோ என்பதைக் கண்டுபிடித்தார் என்கிற விவரத்தை(ஆனால் பொய்)உண்மைகள் மூலம் வாசிப்பவர்களுக்கு உணர்த்தியுள்ள ஆசிரியர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். 1895இல்(ஜெகதீசசந்திர போஸ்)கண்டுபிடித்த பிறகு1896இல் மார்கோனிக்கு உரிமை வழங்கியதை உணர்த்துகிறர்…

நிலவுக்குள் பயணம்

த.வி.வெங்கடேஸ்வரன் அந்த காலத்தில் மனிதர்கள் நிலவைக் கடவுளாகப் பார்த்தனர்.மேலும் நிலவைப்பற்றி பல புதிர்களும் கதைகளும் மக்களிடையே உலவின.நிலவுக்கு மனிதன் பயணமான பிறகு அதுவரை இருந்த கதைகள் எல்லாம் கட்டுடைந்தன.நிலவைப்பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கி கூறும் நூல். ரூ.110/-

இரவு பகலான கதை

ஆயிஷா இரா.நடராசன் “ஆதி உலகம் இருள்மயமானது.கற்களுரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான்.பொங்கும் புகையுடன் தீப்பந்தம்,மெழுகுவர்த்தி,அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்.இந்த வரலாற்றை எளிய அத்தியாயப் பிரிப்புகளுடன் சுவாரசியம் மிக்க மொழி நடையில் கதை போல விவரித்துச் செல்லும் இரா.நடராசன்,வாசர்களுக்கு இருளைக் காட்டி வெளிச்சப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.” ரூ.45/-

மரபியல்

ஆயிஷா இரா.நடராசன் “அறிவியலின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிற மனித இனத்தின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுக்கு விடைகாணுகின்ற மரபியலின்100க்கு100தகவல்கள்.மரபியல் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்கிறது இந்நூல்.” ரூ.30/-

நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

ஆயிஷா இரா.நடராசன் “இதுவரை யாரும் அணுகாத ஒரு பார்வையில் அறிவியலின் வரலாற்றை தனக்கே உரிய நக்கலும்,நகைப்புணர்வும் கலந்த நடையில் எழுதிச் செல்லும் ஆயிஷா நடராசன் ஆயிரக்கணக்கான தகவலுடன் இம்முறை களமிறங்கி இருக்கிறார்.அப்புறம் என்ன அள்ள அள்ள அறிவியல்.” ரூ.80/-

100க்கு100அறிவியல் நேனோ தொழில்நுட்பம்

ஆயிஷா இரா.நடராசன் “ஒரு குண்டூசி முனைக்குள் முழு பிரிட்டானியா களைக்களஞ்சியத்தையே அடக்கியது ஒரு தொடக்கமே.முழு உலகையே ஒரு முற்றுப் புள்ளிக்குள் கொண்டு வர துடிக்கும் நேனோ தொழில் நுட்பம் குறித்த100க்கு100தகவல்கள்.நேனோ தொழில்நுட்பம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்கிறது இந்நூல்.” ரூ.30/-

புரட்சியில் பகுத்தறிவு

ப.கு.ராஜன் “இந்நூல் தத்துவம்,அறிவியல்,அரசியல் ஆகிய மூன்று துறைகளில் தொடக்கம் முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்கை முழுமையாக ஆராய்ந்து ஒரு தெளிவான மார்க்சியப் பார்வையை முன்வைக்கிறது.” ரூ.545/-

ஹிக்ஸ்போஸான் வரை(இயற்பியலின் கதை)

ஆயிஷா இரா.நடராசன் “இயற்கை எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்ந்து அறியதே இயற்பியல்.இயற்பியலின் வரலாறை தொடக்கம் முதல் சமகாலம் வரை ஆயிஷா இரா.நடராசன் வாசகர்களுக்கு உவப்பான ஒருவித மொழி நடையில் புதினம் போல விவரித்து செல்லும் பாங்கு அலாதியானது.இயற்பியலின் எண்ணற்ற புதிர்களையும் ரகசியங்களையும் வரலாற்றின் அடிப்படையில் தகுந்த சான்றாதாரங்களுடன் விவரித்து செல்கிறது இந்நூல்.” ரூ.100/-

கிரகணங்களின் நிழல் விளையாட்டு

த.வி.வெங்கடேஸ்வரன் “ஜோதிடர்களுக்கும் பழமைவாதிகளுக்கும் கிரகணம் என்பது அபசகுனம்,கெட்ட காலம் என கூறுவதில் உண்மையில்லை என்பதை அறிவியல் ரீதியில் விளக்குகிறது இந்நூல்.கிரகணம் இயல்பிலிருந்து வேறுபட்டது.நிலவின் வளர்பிறை தேய்பிறை போல காலவரிசை முறையில் அவ்வப்போது ஏற்படுவது அல்ல.குறிப்பிட்ட இடத்தில் முழு சூரிய கிரகணம் சுமார்360வருடத்திற்கு ஒருமுறைதான் காட்சி தரும்.அவ்வளவு அரிதான காட்சி.இன்று வினாடி தவறாமல் கிரகணத்தைமுன் கூட்டியே கணிக்க முடியும்.கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு விளக்கமும் உள்ளது.கிரகணத்தின்போது அறிவியல் ரீதியாகக் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.கிரகணங்களைப்பற்றிய முழுவிளக்கத்தை தருகிறது இந்நூல்.” ரூ.40/-