கடவுள் கற்பனையே

புரட்சிகர மனித வரலாறு ஏ.எஸ்.கே ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன; இக்கோட்பாடுகள் எவை – இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும், என்று எடுத்துச் சொல்லவும் விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பது தான் உண்மை, என்பதனை ஓரளவு விளக்கவுமே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ரூ.90/-

ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே !

நலங்கிள்ளி கல்வித் துடிப்பிருந்தும் தெளிவில்லாது தடுமாறும் தமிழ்ப் பெற்றோர் – கல்விக் கொள்கையா கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையிலிருக்கும் அரசினர் அதிகார வர்க்கத்தினர் – துறைதோறும் துறைதோறும் தாழ்வுற்று வறுமை மிஞ்சிய தமிழகத்தை மீட்டுயர்த்தப் போராடும் தமிழ்த் தேசியர்கள் – சாண் ஏறினால் முழம் சறுக்குவது ஏனென்று தெரியாமல் திகைப்புறும் சமூகநீதிக்காரர்கள் – மதிப்புக்குரிய ஆசிரியப் பெருமக்கள் – மாண்பமைக் கல்வியாளர்கள்… அத்தனைப் பேரும் இந்நூலைக் கசடறக் கற்றுத் தெளிந்தால் கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை மீளக் காண்பதற்குத் தத்தமக்குரிய பங்களிப்புச் செய்யலாம். எளிய தமிழ்வழிக் கல்விப் பற்றாளராக எனக்கு அறிமுக-மாகி, இந்நூலில் சமூகநீதிக் கல்வியாளராக மலர்ச்சி பெற்றுள்ள தோழர் நலங்கிள்ளியிடமிருந்து தமிழ்ச் சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது. அடியேனும் கூட. ரூ.60/-  

எழில் மரம்

ஜேம்ஸ் டூலி தமிழில் : லியோ ஜோசப் பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம்  பழைய ஹைதராபாத் நகரின்  சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழுது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட  சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்  அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியுமா என்று விடைக் காணப் புறாப்பட்டார். அதன் கதை ‘எழில்  மரம்’ என்ற கவித்துவம் நிறைந்த இந்த நூலில் சொல்லப்படுகிறது. ஆக்கபூர்வமான முடிவுகள் தரும் டூலியின் பயணங்கள் பற்றிய கதை அது. ஆப்ப்பிரிக்காவின் குடிசைப்பகுதிகள் முதல் சீனாவின் கன்சு மலைச் சரிவுகள் வரை அவருடைய பய்ணம் நீண்டது. குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள், புதிய முனைப்புடையோர் முதலியோரின் கதை இது. ரூ.360/-  

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்

கௌதம சித்தார்த்தன் புத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.இயக்குனருக்குத்தெரியாமல் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத்திரிப்புகள் நுட்பமாக கதையின் சட்டகங்களுக்குள் மறைந்து உட்கார்ந்து கொள்ளும். ரூ.120/-

இழக்காதே!

பங்கு சந்தை படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் செல்லமுத்து குப்புசாமி பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது. ரூ.250/-

ஆரியக்கூத்து

ஆசிரியர்: அ.மார்க்ஸ் கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சமவெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்கைளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழத்ததுவிடுகின்றனர். ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ – ஆரிய மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது. ரூ.70/-  

அறிவியல் வளர்ச்சி வன்முறை

  கிளாட் ஆல்வாரஸ் தமிழில் : ஆயிஷா இரா. நடராஜன் ”வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான விதியைப்போல மாற்றவே முடியாத ஒன்றாகவும் வைத்துக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பார்வை நம்மைத் தவறாக வழிபடுத்தும் ஒன்றாகும். வளர்ச்சி என்பது கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் வைக்கப்பட்டுள்ள மாற்றுப் பெயராகவும் பெரிய வன்முறையாகவும் அழிவை நோக்கி நம்மைச் செலுத்தும் கருவியாகவும் இருக்கிறதென்று என்னால் வாதாடமுடியும். ரூ.200/-  

ரெட் சன்

ஆசிரியர்: இந்திரா காந்தி ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்கள் அலுவலகத்திற்குள் நுழையு முன்பு… கட்டாயம் படித்திருக்க வேண்டிய ஒரு புத்தகம், அதிகார வர்க்க அதிகாரிகளும், சமூகவியலாளர்களும் கற்க வேண்டிய ஒரு முக்கிய பாடமாக இந்தப் புத்தகத்தை கருத வேண்டுடிய ஒரு முக்கிய பாடமாக இந்தப் பத்தகத்தைக் கருத வேண்டும் எனடபதைச் சொல்லவேண்டியதில்லை. -தி ஹிந்து ரெட்சன் – இந்தியா, தன் நாட்டு மக்களுடனேயே ஈடுபட்டுள்ள போரைப் பற்றிய ஒரு வருந்தந் தோய்ந்த கதையயைக் கூறுகிறது மாவோயிஸ்டுகளும், அரசும் நேருக்கு நேர் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவில் பரந்த கிராமப் பகுதிகளில் மறைந்திருக்கும். எந்நேரத்திலும் பெரிதாக வெடிக்கக் கூடிய சூழ்நிலையை மிகத் துல்லியமான வரங்களுடன் விளக்கியுள்ளது இந்நூல். ரூ.250/-

முள்கிரீடம்

ஆசிரியர்: மு.ந.புகழேந்தி ஏ கலக்டரே ஏ அரசாங்கமே ஏ தாசில்தாரே இந்த நிலத்தையும் இந்த வனங்களையும் பூமிக்கு கீழே இருக்கும் இந்த பொக்கிசங்களையும் நீதான் எங்களுக்கு கொடுத்தாயா? இயற்கையிடமிருந்து கிடைத்த , இந்த பரிசை நாங்க் ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்து வருகிறோம். தாத்தாக்கள், பூட்டன்கள் காலத்திலிருந்து இது எஙகளுடைய சொத்து நீ யார் இதை எங்களிடமிருந்து பிடுங்க? நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் உடம்பில் உயிர் இருக்கும் வரை அன்னை பூமியைக் காக்க போராடுவோம்… –ஆலியா மாஜ்ஹி, பெண் போராளி, ஒரிசா ரூ.150/-

முள்கிரீடம்

ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள்: ஒரு கள ஆய்வு அ. பகத்சிங் இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது இந்துக்கள் நடத்தும் ஆதிக்கமே இந்த குடியரசாக உள்ளது. ரூ.100/-