ஊமைச்செந்நாய்

ஜெயமோகன் சென்ற நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன.இத்தொகுதியில் உள்ள கதைகளில் இப்போது நான் காணும் பொது அம்சம் ‘கதை’தான்.இவற்றில் நுட்பமான யதார்த்தத்தளம் சார்ந்த ஆக்கங்கள் உண்டு. மிகைபுனைவுகளும் உண்டு. ஆனால் முழுக்க முழுக்க படைப்பூக்கத்தின் தற்செயலை நம்பி எழுதப்பட்டவை. அதனாலேயே ஆசிரியனும் விளக்கிவிட முடியாத பல தருணங்கள் கொண்டவை. செவ்வியலின் அடிப்படையான ஓர் இயல்பை இவற்றில் வாசகர் காணமுடியும். வரிகள்தோறும் செறிந்திருக்கும் கவித்துவ உட்குறிப்புகள்.தமிழ் நவீனகவிதைகள் அடைந்தவற்றைவிட அதிகமான கவித்துவப்படிமங்களை இந்த உரைநடை முன்வைத்துச் செல்கிறது. ரூ.100/-

மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல கதைகள் வெளிவந்த காலத்தில் அதிர்ச்சிகளையும் விவாதங்களையும் உருவாக்கின. லீனியர், நான் லீனியர், எதார்த்தம், புனைவுகள் எனப் பல்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கதைகள் நவீனச் சிறுகதை மொழிக்குப் புது ரத்தம் பாய்ச்சுபவை. இக்கதைகளின்மீது ‘அதிகாரபூர்வமான’ இலக்கிய மதிப்பீட்டாளர்கள் பாராட்டிய மௌனமும் காட்டிய கோபமும் இக்கதைகளின் எதிர்த் தன்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே. பழக்கப்பட்ட கதையின் பாதைகளைப் புறக்கணித்து மொழியின் அபாயகரமான பாதைகளில் பயணிக்கின்றன இக்கதைகள். ரூ.190/-

பதுங்குகுழி

பொ. கருணாகரமூர்த்தி அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்கல் குறித்தும் மேலோட்டமான கதைகளை உற்பத்தி செய்து தள்ளும் வணிக எழுத்துக்களுக்கு மத்தியில் இவரது தனித்தன்மையை, இவரது கனபரிமாணத்தை மிக எளிதில் எவராலும் புரிந்துகொள்ள முடியும். தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்குள் இவர் எளிதாக இடம் பெறுகிறார். இவரது கலை தமிழுக்குக் கிடைத்த ஒரு பேறு என்பதில் ஐயமில்லை. கோவை ஞானி (முன்னுரையிலிருந்து) ரூ.130/-

சுகுணாவின் காலைப் பொழுது

மனோஜ் நவீன தமிழ்க் கதையாளர்களில் சரளமான, தேர்ந்த கதை சொல்லும் முறைக்காக மனோஜின் கதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. தனது கதைகளின் மொழியையும் தொனியையும் வெவ்வேறு தளங்களுக்கு நகர்த்துவதன் மூலம் தனது சொல்முறையைப் புத்துணர்ச்சியுள்ளதாக்குகிறார். இத் தொகுப்பில் உள்ள கதைகள்- இடைவெளிகள், மொளங்கள், நுண்ணிய அங்கதம் என – ஒரு எழுத்தாளன் அடையக்கூடிய வெவ்வேறு சாத்தியங்களுக்கு உதாரணமாக அமைகின்றன. ரூ.70/-

வெள்ளைப் பல்லி விவகாரம்

மாயா 90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க மனதின் அதர்க்கத்தையும் வெகு நுட்பமாக இக்கதைகள் கடந்து செல்கின்றன. நிர்ணயிக்க முடியாத புள்ளிகளின் வழியே நகர்ந்துகொண்டிருக்கும் சமகால வாழ்வின் அபத்தங்களை, அர்த்தமின்மைகளை, குழப்பங்களை லக்ஷ்மி மணிவண்ணனின் மொழி மிக நூதனமாக சித்தரிப்புகளின் வழியே கையாள்கிறது. ரூ.90/

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

சாரு நிவேதிதா சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத் தன்மையை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன. ரூ.60/-

மணற்கேணி

யுவன் சந்திரசேகர் கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வது என்ற கேள்வியின் விளைவே யுவன் சந்திரசேகரின் இந்த நூறு குறுங்கதைகள். சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர்கொள்ளக்கூடிய கணங்கள் இக்கதை களின் ஆதாரமாக இருக்கின்றன. மிகக்குறைவான வாக்கியங் களில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள், விவரணைகள், உரையாடல்கள் குறுங்கதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை உணர்த்துகிறது. இவை குறுங் கதைகளாக எழுதப்பட்டபோதும் அவற்றிற்கிடையே ஓடும் பொது நீரோட்டம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது. ரூ.180/-

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

எஸ். ராமகிருஷ்ணன் கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. ஆணும்பெண்ணும் ஒரே கூரையின்கீழ் வாழ்ந்தபோதும் எவ்வளவு இடைவெளியும், புதிர்மையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. கதைகளின் வழியாக வெளிப்படும் குரல் நகர வாழ்வின் அபத்தத்தையும், வெளிவேஷத்தையும், அர்த்தமற்ற தினசரிவாழ்வின் பசப்புகளையும் கேலி செய்கின்றது. அந்தக் கேலி நம்மைச் சிரிக்க செய்யும் அதே நேரத்தில் குற்றவுணர்வு கொள்ளவும், நிம்மதியற்றுப் போகவும் செய்கிறது என்பதே இக்கதைகளின் தனிச்சிறப்பு. ரூ.120/-

தங்கர் பச்சான் கதைகள்

தங்கர்பச்சான் செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண்சார்ந்த கலைஞராக வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம், மரபுகள் தமக்குள்ளாகப் பொதிந்து வைத்திருக்கும் வன்முறைகள் இரண்டையும் ஒரே தளத்தில் பதிவு செளிணிதுவிடுபவை இவரது கதைகள். காட்சிக்கலையின் நிர்ப்பந்தங்கள் மறுத்த எளிமையின் வழியே நுட்பமான அழகுகளையும் ஊடகங்களால் மறக்கப்பட்ட மனிதர்களையும் பதிவுசெய்யப் பயின்ற இக்கலைஞனுக்கு கதை சொல்வதன் வழியே தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடிகிறது. ஒளிப்பதிவும் மொழிப்பதிவும் ஊடாடும் இவரது கதைப்பரப்பில் இன்னும் இன்னும் சொல்லப்பட வேண்டிய மண்ணின் கதைகள் நினைவூட்டப்படுகின்றன. பிரேம் ரூ.210/-

சுஜாதாவின் மர்மக் கதைகள்

சுஜாதா சுஜாதாவின் சிறுகதைகளில் குற்றத்தையும் மர்மத்தையும் பின்புலமாகக் கொண்டு எழுதிய அனைத்துக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை வெறுமனே வாசக சுவாரசியத்திற்காக எழுதப்பட்ட திகில் கதைகள் அல்ல. மனித அந்தரங்கத்தின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் குற்றத்திற்கான தீராத வேட்கையை இக்கதைகள் பேசுகின்றன. முன் தீர்மானிக்க முடியாத மர்மத்தின் ரகசிய வழிகளைத் தனது சாகச நடையில் சுஜாதா தொடர்ந்து உருவாக்குகிறார். ரூ.230/-