சில இயக்குநர்கள் – சில திரைப்படங்கள்

இலக்கியத்தையும், சினிமாவையும் இக்கட்டுரைகள் முழுமையாகப் பிரதிபலித்து விட்டன என்றெல்லாம் நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை. இரு துறைகளுமே கடல் போன்றது. என்னால் இயன்றவரை, என் அறிவுக்கு எட்டிய வரை தொட்டுக் காட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இத்துறைகள் குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் எழுதவும் ஆசை. – வண்ணநிலவன் ரூ.65/-

குறுக்குவெட்டுகள்

‘குறுக்குவெட்டுகள்’ இயல் இசை நாடகம், ஆடிய ஆட்டமென்ன, சில நூல்கள் என மூன்று பகுதிகள் கொண்டவை. எல்லாமே வாழ்க்கை  பற்றியவை. – அசோகமித்திரன் ரூ.150/-

கதை மழை

பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகள் பேசி இருப்பதை நான் கண்டபோது இரண்டையும் இணைத்து எழுதுவது சுகமாக இருக்கும் என்று தோன்றியது. அதுதான் கதைமழை. – பிரபஞ்சன் ரூ.80/-

வான்குருவியின் கூடு

பெருமாள்முருகன், தன் வாழ்க்கை அனுபவங்களோடு தனிப்பாடல்கள் இயைந்த விதம் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ரூ.80/-  

மறுவாசிப்பில் மரபிலக்கியம்

நவீன இலக்கியவாதிகளுக்கும் மரபிலக்கியங்களுக்கும் இடையில் கண்களுக்குப் புலப்படாத பெரிய சுவர் உள்ளது. உலகத்து நவீனப் படைப்பாளர்களின் உன்னதமான படைப்புகளை ஆர்வத்துடன் வாசிக்கின்றவர்கள் மரபிலக்கியப் படைப்புகளை அந்நிய வஸ்து போலப் புறக்கணிக்கின்றனர். நவீன இலக்கியவாதிக்கு மரபிலக்கியம் எதிரானது அல்ல. ஒரு வகையில் நேசமானது. தமிழ் மரபின் எச்சங்கள் பதிவாகியுள்ள பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை வாசிக்க வேண்டிய தேவை வலுவடையும் நிலையில் புதிய தடத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் நவீனப் படைப்பாளிக்குத் தான் செல்ல வேண்டிய திசைவழி புலப்படும். – முருகேச பாண்டியன் ரூ.100/-

மயிலிறகு குட்டிபோட்டது

பிரபஞ்சன் நடப்பாண்டில் புதியதலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல், கலை இலக்கியம், கல்வித்துறை, நண்பர்கள், உறவுகள், பிரிவுகள், தன் குடும்பம் ஊடாக அவர் கண்டவை, அனுபவித்தவை, உணர்ந்தவற்றை மிக வெளிப்படையாகத் தனக்குக் கைவரப் பெற்ற இனிய மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார். மனித இனம் காலம் தோறும் வடிவமைக்கும் விழுமியங்கள் மற்றும் மதிப்பீடுகளைத் தம் வாழ்க்கை நெறிகளாகக்கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களைச் சித்தரிக்கும் இக்கட்டுரைகள், மீறுபவர்களையும் கூடவே அணைத்துச் செல்கிறது. வெறுக்கத்தக்க மனிதர்களே உலகில் இல்லை என்பது அவருடைய கொள்கையாக இருக்கிறது. – பிரபஞ்சன் ரூ.130/-

தமிழின் நவீனத்துவம்

தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிள் சி. சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. 1960-1967 கால கட்டத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்பும், இன்னும் புத்தம் புதிதாகவும் உயிர்ப்பு மிகுந்ததாகவும் விளங்குகின்றன. தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலத்தையும் தோற்றுவித்த பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி முதலான ஆளுமைகள் பற்றியும் தமிழ் இலக்கியச் சூழல் குறித்தும் மிக நுட்பமான அவதானிப்புகள் அடங்கிய கட்டுரைகள் இவை. இலக்கிய விமர்சனம் என்னும் துறை விமர்சனக் கோட்பாடுகளால் ஆனது என்பதையும் எப்படி இலக்கியம் விமர்சனம் செய்யப்பட வேண்டும் என்பதையும் பயிற்றுவிப்பவை இக்கட்டுரைகள். -பிரமிள் ரூ.140/-

சி.மோகன் கட்டுரைகள்

கடந்த நாற்பது வருடங்களாக சி. மோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இளம்வயதிலேயே உலகின் மகத்தான ஆக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர் இவர். – சி.மோகன் ரூ.380/-

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

கடந்த பத்தாண்டுகளில் கவனம் பெற்று வந்திருக்கும் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தன் சமகாலத்துக் கவிதைகள், கவிதைச் சூழ்நிலை, படித்த புத்தகங்கள், கண்டு நட்பு கொண்ட இலக்கிய உலக ஆளுமைகள், இன்றைய எழுத்துலகச் சூழல் முதலான பல விஷயங்கள் குறித்து தன் எண்ணங்கள், கருத்துகளை இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார். – ஷங்கர்ராமசுப்ரமணியன் ரூ.110/-