கம்பாநதி

ரூ.90/- நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.

நாளைக்கும் வரும் கிளிகள்

ரூ.140/- பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர். தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். கவிதையை நெருங்குகிற தமிழ் உரைநடை இவருடையது. இவர் கதைகளில் கெட்டவர்கள் இல்லை. அப்படி ஒரு ஜாதி மனித குலத்தில் இல்லை என்கிறார். நல்ல அனுபவங்களை, புதிய வெளிச்சங்களைத் தரும் கதைகள் இவை.

ஆடும் குதிரை

ரூ.140/- சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் உலகச் செவ்விலக்கியச் சிறுகதைத் தொகுதி இது.

பதினான்காவது அறை

ரூ.120/- அச்சங்களின் அழகைக் கண்டறிந்த ஒரே ஒரு திரைப்பட கலைஞர் ஹிட்ச்காக் தான். மர்மத் திரைப்படம் எடுப்பது மட்டுமல்லாது அச்சம் தரும் திகில் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதையும் தன் கலைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் செய்தார். அவ்வாறு அவர் தேர்ந்தெடுத்த சிறந்த ஏழு துப்பறியும் கதைகளின் தமிழாக்கம்தான் இத்தொகுப்பு. ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த கதைகள் துப்பறியும் மர்மக் கதை வாசகர்களுக்கு ஒரு வரம்போல் இன்றும் நிலைத்திருக்கின்றன.

கனவுகளுடன் பகடையாடுபவர்

ரூ.140/- நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இது. அண்மைக் காலத்தில் முக்கிய மொழியாக்கக் கலைஞராகக் கவனம் பெற்றுவரும் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில், உலகச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான ரேமண்ட் கார்வெர், இளம்தலைமுறைக் கலைஞர்களில் சிறந்த கெவின் பிராக்மைர், அமெரிக்க நவீன எழுத்தின் பிதாமகர் டோபியாஸ் உல்ஃப், நைஜீரிய எழுத்தாளர் சீமமாண்டா அடீச்சி ஆகியோரின் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கலகம் செய்யும் இடது கை

ரூ.90/- வெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத் தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. சுப்புராய நாயகர் அதைச் செய்திருக்கிறார்.

கோபிகிருஷ்ணன் படைப்புகள்

ரூ.800/- கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்.

ஜெயமோகன் சிறுகதைகள்

ரூ.460/- எர்ணாகுளம் அருகே தங்கியிருந்தபோது தினமும் காலையில் கடலோரம் நடக்கச் செல்வேன். பரிசுத்தமான கடற்கரை. முந்தைய- நாள் மழைபெய்த மணற்பரப்பு. அலைநாக்கின் ஈரம் படிந்து படிந்து குமிழியிட்டு வற்றிக்கொண்டிருந்த பரப்பில் காலைச்செம்மை.

பூமணி சிறுகதைகள்

ரூ.400/- எழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான பூமணி தனது கதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. இருப்புக்கான போராட்டங்கள் கரிசல் வாழ்வைச் சவாலான ஒன்றாக மாற்றியிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த பூமணியின் கதைகளை அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முனைப்புகளைப் பற்றிய ஒரு கலைஞனின் தேடல் எனவும் சொல்லலாம். நமது பழங்கதை மரபின் ஆதாரமான வலுக்களை இழக்காமல் தனக்கான படைப்புமொழியைக் கண்டடைந்தவை இக்கதைகள்.