விலங்குப் பண்ணை

மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து ‘மிருகங்கள் தத்துவ’த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன. ரூ.125/-

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல்வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது செவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன். -ஜெயமோகன் ரூ.780/-

ராஸ லீலா

சாரு நிவேதிதா   நவீனத்துவத்தின் அத்தனை பாதிப்புகளையும் அப்பட்டமாக போட்டு உடைத்த நாவல். சம காலத்தின் அத்தனை சுவாரஸ்யங்களையும் அபத்தங்களையும் பேசும் உற்சாகமாகமான படைப்பிலக்கியம்.  

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

சாரு நிவேதிதா எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற்கு காரணம் தமிழ்ப் புனைகதை மொழியை அது சிதறடித்து ஒரு புதிய கதை சொல்லல் முறையை உருவாக்கியது தான். அந்த வகையில் தமிழில் பின் நவீனத்துவ நோக்கில் எழுதப்பட்ட முதல் நாவலாக இதையே குறிப்பிட இயலும். மனித உடல் மற்றும் மனதின் மீது நமது கலாச்சார வாழ்க்கை செலுத்தும் வன்முறைக்கு எதிராக, இலக்கியத்தில் அது உருவாக்கும் ஒழுக்கவியல் சார்ந்த அழகியலுக்கு எதிராக இந்த நாவல் ஒரு மாற்று மொழியையும் புனைவு வெளியையும் படைக்கிறது. ரூ. 60/-

காமரூப கதைகள்

சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்பவிரும்புவதில்லை. பயத்திற்கும் நிஅச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை அது சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல்கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது. ரூ. 290/-

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஜெயகாந்தன் எழுதிய மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. கிளாசிக் வரிசை என்ற தலைப்பின் கீழ் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வனவாசி

ஆசிரியர்: விபூதிபூசன் வந்த்யோபாத்யாய வனம் எப்படி நகரமயமாகிறது என்பதை விவரிக்கும் மேற்கு வங்கக் கதை. நம் கண் முன்னாலேயே நமக்குத் தெரியாமல் காடு எப்படி காணாமல் போகிறது என்பதை மிக இயல்பாக விவரிக்கிறது. ரூ.170/-

வந்தாரங்குடி

கண்மணி குணசேகரன் எண்பதுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த இருபெரும் திருப்பங்களின் ஊடே பயணிக்கும் நாவல். ஒன்று 69 சதவிகித இட ஒதுக்கீடுக்காக வன்னியர் சங்கம் நிகழ்த்திய மாபெரும் சாலை மறியல் போராட்டம். இரண்டு, நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத்துக்காக பல கிராமங்களை விரட்டியடிக்கப்பட்ட சம்பவம். இரண்டிலும் சம்பந்தப்பட்ட பெருவாரியான வன்னிய சமுதாய மக்களின் இழப்புகளைச் சுற்றிச் சுழலும் நாவல்.

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

  யுகியோ மிஷிமா தமிழில் : கார்த்திகைப் பாண்டியன் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய-சரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது