ஒரு கோடி அமிலக் கண்கள்

பிரேம பிரபா “தோற்றுக் கொண்டேயிருக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் கெட்டிக்காரியான கிராமத்துப் பாட்டியின் வாசனையோடும்,தனிமையில் மௌனத்தின் துணையோடும்,சாம்பல் நிற சுடுகாட்டு நாய்களின் நிஜ நிறம் காண ஒரு கோடி அமிலக் கண்கள் தொடர் மழையை வேண்டி காத்திருக்கின்றன இக்கவிதைத் தொகுப்பெங்கும்.” ரூ.80/-

பசுவின் புனிதம்

வெ.கோவிந்தசாமி “இஸ்லாமியர்கள்,தலித் மக்களுக்கெதிரான வன்மத்தைத் தூண்டி அரசியல் ஆதாயங்களுக்காகவும்,வரலாற்றைத் திரிப்பதற்காகவும் இந்துக்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் இந்துத்துவ ஃபாசிச சக்திகள் பரப்பி வருகின்ற பிரச்சாரங்கள் எந்தவொரு ஆதாரமும்இல்லாதவை என்பதை வரலாற்றின் துணைகொண்டு விளக்குகின்றது.மேலும் நிகழ்கால அரசியல் சூழலில்,மதவெறி சக்திகளிடம் இரையாகிவிடாமல் விழிப்புடன் இருப்பது எப்படி என்று நமக்குக் கற்றுத்தருகிறது இந்நூல்.” ரூ.100/-  

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கும் தீர்ப்பும்

பெ.சண்முகம் “வாச்சாத்தி….தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம். 1992க்கு முன்பு இப்படி ஒரு ஊர் இருப்பதே யாருக்கும் தெரியாது.இன்று இந்த கிராமத்தின் பெயரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்ற அளவுக்கு பிரபலம்.அதற்கு அந்த மக்கள் கொடுத்த விலையோ மதிப்பிட முடியாதது.காரணம் எதுவுமின்றி அப்பாவி மலைவாழ்மக்கள் வனத்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்.இளம் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர்.நினைத்துப் பார்க்க இயலாத கொடுமைகள் அவர்களின் மீது அரங்கேற்றப்பட்டன.அப்போதைய ஜெயலலிதா அரசு இதை மௌனமாய் வேடிக்கை பார்த்தது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டக் களங்கள் இன்றைக்கு அந்த மக்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் தேடித் தந்திருக்கிறது.இந்த நீண்ட போரட்டத்தை அதன் வெம்மை மாறாது இந்நூல் பதிவு செய்திருக்கிறது.” ரூ.5/-

இலங்கை தமிழ் மக்களின் துயரம்

பிரகாஷ் காரத் தற்போது பயங்கரவாதமும் இல்லை.தமிழ் ஈழம் கேட்கவில்லை.தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைத் தான் கேட்கிறார்கள்.குறைந்தபட்சம் சமஷ்டி அரசியல் அமைப்பு முறை;தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற ஒரு சுயாட்சி பிரதேசம்””வேண்டுமென்பது தான்… ரூ.20/-

உணவு மக்களின் அடிப்படை உரிமை

பிருந்தா காரத் இந்நூல்,நம்முடைய வரலாற்றில் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் வெளியிடப்படுகிறது.இந்தியா,முன்னெப்போதுமில்லாத பொருளாதார வளர்ச்சி கொண்ட ஒரு10ஆண்டு காலத்தை கண்டிருக்கிறது.ஆனால் இந்த வளர்ச்சி,பெருந்திரளான மக்களின் வறுமையையோ,வேலை இன்மையையோ,ஊட்டச்சத்துணவுக் குறைவையோ…..குறைப்பதற்கு இட்டுச் செல்லவில்லை.இந்நிலைமை பொருளாதார கொள்கை உருவாக்க முறையையும் இந்த வளர்ச்சிக்கான நிகழ்வுப்போக்குகளில் பெருந்திரளான மக்கள் எப்படி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் புரிந்து கொள்வது நமக்கு மிக முக்கியமானதாகும். ரூ.60/-

அரசும் புரட்சியும்

லெனின் புரட்சியாளர்கள் ‘அரசு’ என்பதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள்.பிறகு புரட்சி வென்றபின் அவர்கள் மக்களுக்கான அரசை எப்படி அமைக்கிறார்கள்?இந்த மிகச் சிக்கலான இடத்தை அங்குலம் அங்குலமாக எடுத்து எளிதாக நமக்கு லெனின் விளக்கிச் செல்கிறார்.” ரூ.90/-

பட்டியல் சாதிகள் பழங்குடிகள் அரசு

ஆனந்த் டெல்டும்டே “மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என அரசமைப்புச்சட்டத்தால் கட்டளையிடப்பட்டுள்ள அரசு,நாளாவட்டத்தில் செய்ததெல்லாம் மக்களுக்குத் தன் கோரைப்பற்களைத் திறந்து காட்டியதுதான்.அவர்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களைக் கடிக்கிறது;தலித்துகளாக இருந்தால் அவர்களை இன்னும் கூடுதலாகக் கடிக்கின்றது.பட்டியல் சாதிகள்-பட்டியல் பழங்குடிகள் ஆகியோரைப் பாதுகாக்கும் எனக் கருதப்பட்ட அரசு அவர்களைத் துன்புறுத்தும் சக்திகளில் முதன்மையானதாக விளங்குகிறது.” ரூ.30/-

குஜராத் வளர்ச்சியா?வீக்கமா

சா.சுரேஷ் “குஜராத்தில் எல்லாம் இருக்கிறது.ஆம்,குஜராத்தில் ஊழல் இருக்கிறது ஆளுமைத் திறமையின்மை இருக்கிறது.சாதி,மதவெறி இருக்கிறது சமூக ஏற்றத்தாழ்வு இருக்கிறது.சுற்றுச் சூழல் சீர்கேடு இருக்கிறது.மக்கள் சொத்து தனியார் கட்டுப்பாட்டில் இருக்கிறது.பச்சிளங் குழந்தைகளின் சாவு இருக்கிறது.மின்சாரம் இல்லாமலிருக்கிறது.குழந்தைகள் எடைக் குறைவுடன் இருக்கின்றன.பிரசவ மரணம் இருக்கின்றது.கல்லாமை இருக்கின்றது.குறைவான பாலின விகிதம் இருக்கிறது.பொய்யும் புரட்டும் இருக்கிறது.” ரூ.30/-

மீரட் சதி வழக்கு

கி.ரமேஷ் அன்றைக்கு அரும்பியிருந்த பொதுவுடமை இயக்கத்தை முளையிலேயே கிள்ளி அழிக்க ஆங்கில ஏகாதிபத்தியம் முனைந்த மூன்று சதி வழக்குகளில் மூன்றாவது(மற்றவை பெஷாவர்,கான்பூர்)மீரட் சதி வழக்கு.வழக்கு கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதற்கு பதிலாக தொழிலாளர் மத்தியில் பரவலாக அறிமுகப்படுத்தி ஆதரவு பெருகவே வழிவகுத்தது ஃபிடல் கேஸ்ட்ரோ போல,ஜார்ஜ் டிமிட்ரோவ் போல நெல்சன் மண்டேலா போல அன்றைக்கே இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்கள் நீதிமன்றத்தைப் பிரச்சார மேடையாக்கிய கதை. ரூ.15/-

நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு

மன்த்லி ரெவ்யூ கட்டுகரைகள் ஐன்ஸ்டீன்,சே குவேரா,பால்.எம்.ஸ்வீஸி,பால் பரான்,லியூ ஹூபர்மன் போன்ற ஆளுமைகள் எழுதிய கட்டுகரைகள் கொண்ட தொகுப்பு;வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்தபோதே எழுதப்பட்டு இன்றைக்கும் இடதுசாரிகள் அனைவரும் வாசிக்கும் அவசியம் உள்ள தொகுப்பு இப்போது நல்ல தமிழில் உங்கள் கையில்…. ரூ.150/-