உலகை மாற்றிய சமன்பாடுகள்

ஆயிஷா இரா.நடராசன் பித்தாகரஸ் தேற்ற சமன்பாடு முதல் நியூட்டனின் ஈர்ப்பு விசை,வெப்ப முடுக்கவியலின் இரண்டாம் விதி,மாக்ஸ்வெலின் மின் காந்தவியல்,யுலர்,நேவியர் ஸ்டோக்ஸ் மற்றும் கணித உலகை புரட்டிப் போட்ட முக்கியமான சமன்பாடுகள் குறித்த நுட்பமான விவரணைகளை ஆயிஷா.இரா.நடராசன் இந்நூலில் வாசகர்களுக்கு தந்துள்ளார். ரூ.40/-

கணித மேதைகளின் பேஸ்புக்

ஆயிஷா இரா.நடராசன் கி.மு. 624-546காலத்து மிலிட்டஸின் தாலஸ் முதல் கி.பி. 20ஆம் நூற்றாண்டை சேர்ந்த பால் ஏர்டிஷ் வரையிலான100கணித மேதைகளின் முக்கிய கண்டுபிடிப்புகளையும்,அவர்கள் கணித துறைக்கு ஆற்றிய மாபெரும் பங்களிப்புகளையும் இன்றைய நவீன பேஸ்புக் வடிவத்தில் ஆயிஷா இரா.நடராசன் வார்த்துத் தந்துள்ளார். ரூ.60/-

நத்தைக்கு எத்தனை கால்?

ஆயிஷா இரா.நடராசன் “ஜூனியர் இராமனுஜன்களாகிய100பள்ளி மாணவர்கள் தங்கள் கணிதத் திறமையை நிரூபிக்கும் விதத்தில் உருவாக்கியுள்ள கணித புதிர்களை ஆயிஷா இரா.நடராசன் இந்நூலில் தொகுத்து தந்துள்ளார்.கணிதத்தில் மாணவர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.” ரூ.45/-

எண்களின் கதை

த.வி.வெங்கடேஸ்வரன் “ஜைர் நதிக்கரையில் கண்டு எடுக்கப்பட்ட இந்த சுமார்20,000ஆயிரம் ஆண்டு பழமையான எலும்பில் மூன்று வரிசை வெட்டுக் கோடுகள் உள்ளன.இந்தக் கோடுகளில் ஒழுங்கும் பாங்கும் தொகுப்பும் தெரிகிறது.எண்களின் வரலாறு,வளர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்நூல்” ரூ.40/-

கணிதமேதை ராமானுஜம்

த.வி.வெங்கடேஸ்வரன் “என் கணவராகிய கணிதமேதை ராமானுஜம் பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.ஆனால் இதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.எனவே நம்மவர்கள் என் கணவரைப் பற்றி மேலும் விவரமாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும் என மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!என் கணவருடைய வாழ்க்கை வரலாற்றை மிகத் துல்லியமாக’ரகமி’எழுதி இருப்பதைப் படிக்கும்போது எனக்குப் பழைய நினைவுகள்,என் மாமனார் குடும்பம்,எங்கள் குடும்பத்தின் அத்தனை விஷயங்களும் என் மனத்திரையில் சலனப்படம் போல நினைவுப்படுத்துகின்றது.இந்த நூலை எழுத’ரகமி’எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.” ரூ.120/-

வரையலாம் வாங்க ஓவிய பயிற்சிப் புத்தகம்

ஓவியர்:கி.சொக்கலிங்கம் வட்டம் சதுரம் முக்கோணம் செவ்வகம் கூம்பு அறுகோணம் உருளை பட்டை நீளத்தில் வடிவம் எல்லாம் அடங்கிடுமே!ஒன்றின் உருவம் அடிப்படையில் எந்த வடிவம் கண்டுபிடி! ரூ.60/-

சித்திரம் பேசேல்

மீனா தீராநதி, உயிர் எழுத்து மற்றும் இணையப் பக்கங்களில் எழுதி வரவேற்பிற்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளான கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ‘சித்திரம் பேசேல்’ என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. பொய்மொழிகளை மெய்போலத் தோன்றும் வண்ணம் பேசாதே என்பது பொருள். கடந்த சில ஆண்டுகளில் எழுத வந்து தனக்கென ஒரு இடத்தை வரித்துக்கொண்ட மீனாவின் இரண்டாவது நூல் இது. ‘ஊடகக் கவனிப்பு’ (Media Watch) எனும் திசையில் உருவாகியுள்ள சில காத்திரமான கட்டுரைகளும், முத்துப்பழனியின் ‘ராதிகா சாந்தவனம்’ எனும் காவியத்தின் அங்கமான சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகளும் தமிழுக்குப் புதியவை. வரலாற்றுத் திரு உருக்கள் மட்டுமல்ல எதிர்மறைப் பிம்பங்களும் கூட இங்கே எவ்வாறு தட்டையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை வ.வே.சுவை முன்வைத்து மீனா விவாதிப்பது இந்நூலின் இன்னொரு முக்கிய பங்களிப்பு. அரசியலும் அழகியலும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என நிறுவுகின்றன இந்நூலிலுள்ள கட்டுரைகள். ரூ.215/-

ரெட் பலூன்

கொ.மா.கோ.இளங்கோ ஒரு பலூன் உங்களையே சுற்றிச்சுற்றி அலைந்ததுண்டா? நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைத் தொடர்ந்து வந்து மகிழ்வித்ததுண்டா? உங்களோடு கதை பேசியதுண்டா? நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு உங்களைத் தேடி வந்ததுண்டா? நீங்கள் பெற்ற தண்டனைக்காக யாரையும் தட்டிக் கேட்டதுண்டா? நீங்கள் தேம்பித் தேம்பி அழுதபோது உங்களைத் தேற்றியதுண்டா? பாரீஸ் நகரில் வசிக்கும் பாஸ்கல் என்ற சிறுவனது வாழ்க்கையில் இவை அத்தனையும் நிகழ்ந்தது. உயிர் அற்ற ஒரு பொருளைக்கூட அன்பினால் வசப்படுத்த முடியும் என்று எளிமையாக விளக்குகிறது ‘ரெட் பலூன்’ புத்தகம். குழந்தைகள் உலகில் நேசமும் நம்பிக்கையும் கொட்டிக் கிடப்பதை உணர்த்தும் கதை. ரூ.35/-

சங்க இலக்கிய பதிவுகள்

அருணன் அறிவியல் வளர்ச்சி,அறிவுதேடல்,தமிழ்,தமிழிலை காலத்தோடு வாழ,காலத்தோடு ஓட கட்டாயப்படுத்துகிறது.இருப்பினும் மரபின் தொடர்ச்சி இல்லாமல்,வேர்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் நிகழும் அடுத்தக் கட்டப் பாய்ச்சல் உள்ளீடற்றது.நமது மரபின் நமது வேரின் அற்புதக் களஞ்சீயமான சங்கத்தமிழ் இலக்கியப் புதையலை,காலந்தோறும் பயில்வதும்,உணர்வதும்,சொற்களின் புதுப்புது அர்த்தங்களை வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பின்னணியில் தெளிவதும் தேவை. ரூ.25/-

அறியப்படாத தமிழ் உலகம்

ஈரோடு தமிழன்பன் தமிழ் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவனங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவனப்படுத்தும் முயற்சியே’அறியப்படாத தமிழ் உலகம்’எனும் மலர்.இம்மலர் தமிழிலியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய ஆவனமாகவும் அமைத்துள்ளது. ரூ.225/-