இன்றைய சமூக சீர்கேட்டுக்கெல்லாம் எதோ ஓர் இடத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாவல் அதைத் தேடிய பயணம்தான். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் பேரரசுக்கு சமயம், பண்பாடு இரண்டிலும் ஒரு நெருக்குதல் ஏற்பட்டது. மதுரையை ஆண்ட சுல்தானியர்களும் விஜயநகரத்தை ஆண்ட ஹரிகர புக்கர் அரசும் உண்டாக்கிய நெருக்கடியின் வலி இன்றும் தொடர்கிறது. விமர்சனக் களம் கொண்ட இந்த நாவலும் விமர்சனத்துக்குத் தப்பாது என்பது கண்கூடு. சமயம், சாதி தொடர்பான பல கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியாகவும் இந்த நாவலைப் படைத்திருக்கிறார் தமிழ்மகன்.
தமிழில் ஆட்டிசம் குறித்து எழுதப்பட்ட மிகத் தரமான நூல். இரா.கோவர்தன் எழுதியது. மருத்துவர் கு.சிவராமனின் பெருமை மிகு முன்னுரையுடன்.
குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ் நாட்டில் இருந்து மெசபடோமியா – கிரேக்கம் என நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?… நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் அதைத்தான் பேசுகிறது. ரூ.150
Rs.150.00 -சரவணன் சந்திரன் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாக பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70 கலிலிருந்து 90 கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் தனிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வேறு அரசியல் எதிர்ப்பியக்கங்கள் எழுந்த காலமும் கூட. 70வதுகளுக்குப் பிறகு துவங்கி இப்போதுவரை தொடரும் காலத்தின் இளைஞர்கள் உலகம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடுகிறது சரவணன் சந்திரனின் இந்த நாவல். உலகமயமாதல் சூழலில் தனது இடம், அடையாளம் குறித்து எந்த பிடிமானமும் இல்லாத இளைஞர்களின் அந்தரங்க உலகம், அவர்களது மனித உறவுகள், சமூக உறவுகள் ஆகியவை தண்ணீரில் விழும் பிம்பங்களைப் போல் கலங்களாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன. அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய காலத்தில் சஞ்சரிக்கும் இந்த நிகல்களுக்கிடையிலான உரையாடல்களும் போராட்டங்களும்தான் நம் காலத்தின் மொழியாக இருக்கின்றன. அந்த மொழியின் வழியே எழுதப் பட்ட ஒரு சமகால தமிழ் வாழ்க்கையின் கதைதான் ரோலக்ஸ் வாட்ச் .
தமிழ்மகன் சிந்து எனக்கு கேக் ஊட்டிய நேரத்தில் செல்போன் அடித்தது. மகனும், மகளும் இன்னமும் ‘ஹாப்பி பர்த் டே டாடி’ பாடிக் கொண்டிருந்தார்கள். கேக்கை விழுங்கிவிட்டு செல்போனை எடுக்கலாம் என நினைத்தேன் அதுதான் இமாலய தவறு. செல்போனில் அழைத்தது எம்.டி. வாயைத் துடைத்துக்கொண்டு போனை எடுப்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. எம்.டி. தேவையில்லாமல் அழைக்க மாட்டார். மிக அவசரமான வேலையாக இருந்தால்தான் அழைப்பார். நாகரிகமாகத்தான் பேசுவார். ‘உன்னை ஏதும் டிஸ்டர்ப் பண்ணவில்லையே? ஒரு ஹெல்ப் வேணும்’ இப்படித்தான் பேசுவார். ஒருபோதும் எம்.டி. அழைத்து, எடுக்காமல் விட்டதில்லை. எதற்கு அழைத்தாரோ, என்ன அவசரமோ என வேகமாக மனதில் ஓட்டிப் பார்த்தேன். கேக் சாப்பிடுகிற ஆசையில் போனை எடுக்காமல் விட்டுவிட்டோமே? என்ன நினைப்பாரோ என்ற புதிய கேள்வியும் மனத்தில் உதித்தது. உப கேள்விகள் பிறந்து ஏகப்பட்ட கொக்கிகள் நியூரான் எங்கும் நிரம்பி, குப்பென்று வியர்த்தது. உடனே அழைத்தேன். போன் எங்கேஜ்டாக இருந்தது. மறுபடி நம்மைத்தான் அழைத்துக் கொண்டிருக்கிறாரோ… அவருக்கும் எங்கேஜ்ட் டோன் வருமே… நாம் அலட்சியமாக வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதாக நினைத்துவிட்டால்… போனை அப்படியே வைத்துவிட்டுக் காத்திருந்தேன். வியர்வை அதிகமாகிக் கொண்டிருந்தது. என் மனைவி சிந்து கிராமத்துப் பெண். என்னை சார்ந்தே யோசித்துப் பழக்கப்பட்டுப் போனவள். கணவனுடைய அதிர்ச்சியோ, பாமோ அவளை உடனடியாகப் பாதித்துவிடும். நான் பயப்படும் அளவுக்கு சற்று கூடுதலாகவே பயப்படுவாள். ‘ஊருக்கே போய்விடலாங்க’ என்கிற அளவுக்குப் போய்விடுவாள். ஆனால், நான் மகிழ்கிற அளவுக்கு மகிழ்கிற பழக்கம் அவளுக்கு இல்லை. பெரியவனுக்கு அம்மா குணம்தான், அவனும் அப்பா மீண்டும் இயல்பு நிலைக்கு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தான். சின்னவளுக்கு இன்னமும் யாருடைய குணம் என்பதை அத்தனை ‘சுகுராக’ வரையறுக்க முடியவில்லை. ஒட்டு மொத்தக் குடும்பமும் இப்போது எம்.டி. எதற்காக அழைத்தார் என்ற குழப்பத்தில் இருந்தது. ‘‘ஏம்பா போன் பண்ணா எடுக்கமாட்டியா?” என கொஞ்சம் டோஸ்விட்டு விட்டு வைத்து விட்டாலும் போதும் என்றிருந்தது. பேசாமல்…
பாஸ்வேர்டு நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகள் போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. ஐந்து நிமிடங்களுக்கு மேலாக சாலையைக் கடக்க வழிகிடைக்காமல் நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சி போல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர். சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது; ஆனால் அது வேலை செய்யவில்லை; போக்குவரத்து போலீஸாரும் இல்லை. இரண்டு பேருக்குப் பரிதாபப்பட்டு வாகனங்கள் நிற்பதாகவும் இல்லை. ஒருவரை ஒருவரை ஒருவர் வழித்துணைபோல பார்த்துக்கொண்ட அந்தத் தருணத்தில்தான் அவர்களுக்குள் பார்வை அறிமுகம் நிகழ்ந்தது. “சிட்டி பேங்க் நான்கு மணி வரைக்கும்தானே?’’ என அவள் கேட்டபோதுதான் அவனும் ஒரு புன்னகையோடு தயார் ஆனான். அவளும் புன்னகைத்தாள். அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. இன்னைக்கு லாஸ்ட் நாள் வேற’’ என்றான். அந்த வாகனத் திரளில் மனிதர்கள் இருவர் பேசுவதற்கான சூழ்நிலை இயல்பாகவே உருவாகியது. உடனடியாக அவள் ஒரு காரியம் செய்தாள். அவளுடைய கைப்பையில் இருந்து செல்போனை எடுத்தாள். வேகமாக சில பட்டன்களை அழுத்தினாள். பொறுமை இன்றி காத்திருந்தாள். அவள் முகத்தில் புன்னை மலர்ந்தது. “ஆன்லைன்லயே கட்டிட்டேன்.’’ செல்போன் குறுஞ்செய்தியைப் பார்த்தபடி, பொதுவாக சொன்னாள். ஆனால், அதைக் கேட்பதற்கு அங்கு அவன் ஒருவன் மட்டும்தான் இருந்தான். அவள் முடிவெடுத்த வேகம், தொழில்நுட்பத்தை சட்டென பிரயோகித்த திறமை, விழிகளைச் சுழற்றியபடி சொன்ன பாணி… எதனாலோ அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவள் மஞ்சள் நிறப் புடவை கட்டியிருந்தாள். அதே நிறத்தின் சகோதர வேறுபாடுதான் அவளுடைய நிறம். அவ்வளவு மலர்ச்சியான விழிகள். கேமிரா படம் எடுப்பதுபோல் அதன் இமைகள் மெல்ல மூடித் திறந்தன. சுருள் சுருளான கருப்பான தலைமுடி, வாகன ஓட்டத்துக்கு ஏற்ப காற்றில் அலைபாய்ந்தது. மஞ்சள் நகப்பூச்சு. நீளமான விரல்கள்….
இல.சண்முகசுந்திரம் இந்திய அரசியல் சாசன இலட்சியங்களான சோசலிசம்,மதசார்பின்மை,ஜனநாயகம் ஆகியவை நிதர்சனமாக வேண்டுமென்றால்,அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்புகளை அளிக்கும் அருகமை பள்ளிகளை கொண்ட பொதுப்பள்ளி முறையே இன்றைய தேவை… ரூ.25/-
இரா.தட்சணாமூர்த்தி “மாணவர்கள் படிக்காமல் போனதற்குக் குடும்பமும் பள்ளியுமே காரணம்.குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும் பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.அரசின் நூறு விழுக்காடு தேர்ச்சிக்கு ஒரு லட்சம் பரிசு என்பது இந்த நூலில் வருகின்ற கார்த்திக்,செல்வம் போன்று எத்தனைபேரைப் பள்ளிகளைவிட்டு விரட்டியது என்பது தெரியாது…” ரூ.40/-
அண்ணாமலை கல்வி குறித்து சுதந்திர காலத்துக்கு முன்பே பல்வேறு இதழ்களில் காந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இக்காலத்துக்கும் தேவையாகிறது. ரூ.90/-
வசீலி சுகம்லீன்ஸ்கி மனிதர்களது பழக்கவழக்கங்கள்,சிந்தனை,பகுத்தறியும் உணர்வு,சுபாவம் போன்றவை அவர்களது சுற்றுச்சூழல்களிலிருந்து ஆறு வயதிற்குள் அதிகமாக கற்றுக்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரூ.90/-