இழக்காதே!

பங்கு சந்தை படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் செல்லமுத்து குப்புசாமி பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது. ரூ.250/-

ஆரியக்கூத்து

ஆசிரியர்: அ.மார்க்ஸ் கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சமவெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்கைளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழத்ததுவிடுகின்றனர். ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ – ஆரிய மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது. ரூ.70/-  

அறிவியல் வளர்ச்சி வன்முறை

  கிளாட் ஆல்வாரஸ் தமிழில் : ஆயிஷா இரா. நடராஜன் ”வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான விதியைப்போல மாற்றவே முடியாத ஒன்றாகவும் வைத்துக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பார்வை நம்மைத் தவறாக வழிபடுத்தும் ஒன்றாகும். வளர்ச்சி என்பது கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் வைக்கப்பட்டுள்ள மாற்றுப் பெயராகவும் பெரிய வன்முறையாகவும் அழிவை நோக்கி நம்மைச் செலுத்தும் கருவியாகவும் இருக்கிறதென்று என்னால் வாதாடமுடியும். ரூ.200/-  

அவரை வாசு என்றே அழைக்கலாம்

இந்தியாவின் நொறுக்கப்பட்ட இதயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள  சுப்ரன்ஷு சௌத்ரி ஏழு ஆண்டுகளை சதீஸ்கரில் உள்ள நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகளுடன் கழித்துள்ளார் . இந்த உணர்ச்சிகரமான தேடலில் வேட்டையாடப்பட்ட ஆண்களிடமும் பெண்களிடமும் மிக உன்னிப்பாக, வரிசையாக எல்லா நிலைகளிலும் கேள்விகள் கேட்டு புலனாய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார் . இந்த அசாதாரண புத்தகத்தின் மையப்புள்ளியாக உள்ள  “வாசு” ஒரே நேரத்தில்  தோழராகவும், புரட்சியாளனாகவும், நண்பனாகவும், அந்நியனாகவும் இருந்துள்ளார்.  இதுவரை மாவோயிஸ்ட்டுகளைப் பற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒரே மாதிரியான தவறான பிம்பத்தை  சுப்ரன்ஷு சௌத்ரி  வாசு போன்ற மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து  பெறப்பட்ட உண்மைக்  கதைகள் மற்றும் தரவுகளின் மூலம்  மாற்றியமைக்கிறார். இதுவே இந்நூலை சமீப காலத்தில் வெளிவந்த  மாவோயிஸ்ட்டுகளின் வரலாற்றைப் பற்றி பேசக்கூடிய  மிகவும் விரிவான, பாகுபாடற்ற, நேர்மையான ஆவணமாக மாற்றுகிறது. ரூ.180/-

படைப்பாளிகள் உலகம்

ஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும் ஒரே கதையைத்தான் மா(ற்)றி மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூறிவிடமுடியாது. இதையே இன்னும் சிறிது விஸ்தரித்தோமானால் அவன் என்ன எழுதினாலும் அது அந்த ஒரே கதையின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறிவிடமுடியும். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை ஒருசேர இப்போது படித்தபோது எனக்கு அவை என் கதைகள் இவ்வளவு ஆண்டுகள் சொல்லி வரும் செய்தியைத்தான் வெவ்வேறு தகவல்கள் கொண்டு சொல்வதாகத் தோன்றியது. இக்கட்டுரைகளை எழுத நேர்ந்தபொழுது ஒரு சில எனக்கு நிர்ப்பந்தமாகக் கூடத் தோன்றியிருக்கின்றன. ஆனால் எழுதி முடித்தபின் இவை அனைத்தும் என் சிந்தனைக்கும் கவனத்திற்கும் நிறைய ஊக்கம் தந்திருக்கின்றன. ஒரு நல்ல கதை எழுதி முடிப்பதில் விளையும் ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் மனநிறைவுக்கும் இது சற்றும் குறைந்ததல்ல. – அசோகமித்திரன் ரூ.190/-

சொல்முகம்

என் உரைகள் எல்லாமே முன்னரே தெளி-வாகக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அந்தக் குறிப்புகளை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன். ஆனால் நான் ஒருபோதும் குறிப்புகளைப் பார்த்து வாசித்ததில்லை. எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்-போவதென்ன என்பது முன்னரே தெளிவாகி-விடுகிறது. நம் உரைக்கு தொடக்கம், முடிவு, உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்–கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத் திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது. இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். ரூ.170/-

நாளும் பொழுதும்

நாளும் பொழுதும்’ நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே வாழ்விலே ஒருமுறை, நிகழ்தல் போன்ற தொகுதிகளில் என் இத்தகைய எழுத்து-கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வாசகர்-களுக்கு மிக நெருக்கமானவையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் இவை உண்மை-யான அனுபவங்கள் என்ற பிரக்ஞை இவற்றுக்கு வாசகரின் நம்பகத்தை உருவாக்கித் தருகிறது. அந்த உண்மையனுபவத்தில் இருந்து எழும் ஓர் உணர்ச்சி அல்லது தரிசனம் வாசகன் எளிதில் தொட்டறியக் கூடியதாக உள்ளது. சிறந்த புனைவுத் தருணங்கள் அளவுக்கு இந்த அனுபவத் தருணங்களும் கலைத்-தன்மையை அடைவது இப்படித்தான். ரூ.120/-

சினிமா பாரடைஸோ

சினிமா பாரடைஸோ படம் பார்ப்பதற்குத் தரும் அதே சுவாரஸ்யத்தை அந்தப் படத்தின் திரைக்கதை வசனமும் தருகிறது. பொதுவாகத் திரைக்கதை வசனத்தைப் படத்தின் கதாசிரியர்தான் எழுதுவார். பின்னர் அது பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். ஆனால் இது மொழிபெயர்ப்புப் புத்தகமல்ல. படத்தை டிவிடியில் பலமுறை பார்த்து நேரடியாகத் தமிழில் அதன் திரைக்கதை வசனத்தைத் தந்திருக்கிறார் யுகன். இது ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதைவிடக் கடினமானது. யுகன் நிறைய காலம் உழைத்து இப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். சினிமா பாரடைஸோ ஏற்கனவே எல்லோராலும் மிகவும் விரும்பப்பட்ட படமாதலால் சரளமாக எவ்வித நெருடலுமின்றி எழுதப்பட்டிருக்கும் அதன் திரைக்கதை வசனமும் நல்ல வரவேற்பினைப் பெறும். – அம்ஷன் குமார், திரைப்பட இயக்குநர் ரூ.95/-

மலாலா – ஓர் அறிமுகம்

துப்பாக்கி ஏந்திய தாலிபான்களுடன் பேனா ஏந்திப் போராடியவர் மலாலா. துப்பாக்கியால் துளைக்கப்பட்டும் மனம் தளராமல் பெண் கல்விக்காகப் போராடியதால் 17 வயதில் ‘அமைதிக்கான நோபல் பரிசை’ப் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட வீரப் பெண்ணின் வாழ்க்கை பற்றி அறிந்துகொள்வது நமக்கு அவசியமாகிறது. அந்த நோக்கத்தில் உருவானதே இந்த நூல். – பிரியா பாலு ரூ.60/-

மகாபாரதம்

சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை. – பிரபஞ்சன் ரூ.300/-