சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்

சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும் அ. உமர் பாரூக் உண்மையை எழுதுவதென்றால் உயிரையும் உடைமையையும் பணயம் வைத்தாக வேண்டும் என்கிற நெருக்கடியை உருவாக்குவதில் அடிப்படைவாதிகள் அச்சந்தரத்தக்க வகையில் முன்னேறி வருகிறார்கள். புத்தகங்களை கொளுத்துவது, எழுத்தாளரை ஊர்விலக்கம் செய்து ஒதுக்குவது, மன்னிப்பு கேட்கவைப்பது, இனி எதையும் எழுதமாட்டேன் என்று வாக்குமூலம் செய்யவைப்பது, எழுத்தாளரை கண்காணாத இடத்துக்கு தூக்கிப்போய் வதைப்பது என்று இந்த அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகள் பன்முகத் தாக்குதலாய் விரிகிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும் தனிமனித உரிமைக்கும் விடப்பட்டு வருகிற இச்சவாலை ஜனநாயகச் சிந்தனை கொண்டவர்கள்   எதிர்கொண்டு முறியடிப்பார்கள் என்பது வெறும் நம்பிக்கையல்ல, உலகெங்கும் வரலாறு நெடுகிலும் அதுவே நடந்திருக்கிறது. பாதுகாப்பான அந்த நற்காலம் உதிக்கும்வரை முடங்கிக்கிடக்காமல் கலைஇலக்கியவாதிகள்  தத்தமக்கேயுரித்தான படைப்பூக்கத்தில் புதிதுபுதிதான வடிவங்களையும் களங்களையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி இந்தச் சமூகத்தோடு தங்களது வீரியமான உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருப்பதற்கான சாத்தியங்களை முன்மொழிகிறது உமர்பாரூக்கின் இந்தக் கதை. – ஆதவன் தீட்சண்யா ரூ.70/-

சயனம்

வா.மு.கோமு பல முகங்களையும், பரிமாணங்களையும் கொண்ட கிராமிய வாழ்வை எவ்வித இட்டுக்கட்டுதலுமின்றி அதன் இயல்பிலேயே சொல்லிக் கடக்கிறார் வா.மு.கோமு. கலாச்சாரப் போர்வையை கிழித்தெறிந்து விட்டு பாலியல் தன் வேட்கையை நிறுவுகிறது. பேராசை, பெரும்பசி என இவைகளே வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. ரூ.250/-

கோட்டை வீடு

ம. காமுத்துரை ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம் புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது.பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை. இவை இணையும் புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஏதாவது ஒரு புள்ளித் தேர்வு நிகழ்ந்துகொண்டே இருக்கும். ரூ.150/-

குழந்தைகளின் ரட்சகன்

ஜெ.டி. சாலின்ஜர் தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் சர்ச்சைக்குரிய இந்த நாவல் 1951 ஆம் ஆண்டு பெரியவர்களுக்கென்று வெளியிடப்பட்டது ஆனால் பதின்மவயதினரின் மனக்கவலை, புறக்கணிப்பு, உளக்கோளாறு ஆகியவை இந்த நாவலின் மையக் கருத்துக்களாக இருந்ததால் இது அவர்களிடையேயும் பிரபலமானது. உலகத்தின் முக்கியமான மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வருடத்திற்கு கிட்டத்தட்ட 250,000 பிரதிகள் விற்பனையாகி வரும் இந்த நாவல் இது வரை 65 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிருக்கிறது. ரூ.275/-

குட்டிச்சுவர் கலைஞன்

கீரனூர் ஜாகிர்ராஜா எழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல்  தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா. ரூ.150/-

கள்ளி

வா.மு. கோமு தலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்து நெரிபடுகிற மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் சேரிப்புல்லாங்குழல்! ரூ.190/-

கரும்பலகை

எஸ்.அர்ஷியா பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்விட்டுக் கிளம்பும் ஒருத்தியின் கதை. ரூ.150/-

கருத்த லெப்பை

கீரனூர் ஜாகிர்ராஜா இவன் மனமெல்லாம் களிமண் பிசைந்து கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோ செய்து தருவாள். ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்ணை உருண்டை செய்து வைப்பாள். கருத்தலெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக ஒலிக்கும். “இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனம் – தமிழ்ச்சேவை இரண்டு.” ரூ.70/-

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

யுகியோ மிஷிமா தமிழில் : கார்த்திகைப் பாண்டியன் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய-சரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது. ரூ.250/-

ஏழரைப் பங்காளி வகையறா

எஸ்.அர்ஷியா அர்ஷியாவின் முதல் நாவலான இந்த  “ஏழரைப்  பங்காளி வகையறா” தமிழ் – உருது முஸ்லிம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஒரு உணர்ச்சிச்  சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்குரவு எனும் இடும்பையை ,மடி எனும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கிக் தந்திருக்கிறது. அந்த சோகங்களை உள்வாங்கிக் கொண்டு, ஆனால் அதையும் தாண்டி மனித உறவுகள் இறுக்கமாகப் பின்னப்பட்டிருக்கின்றன என்பதை – ஒரு புதிய எடுத்துரைப்பியல் உத்தியோடு- அழகாக காட்டுகிறது. அதனால் தான் இந்த நாவல் பலருடைய கவனிப்புக்கும் விருப்பத்துக்கும் உரியதாக இங்கே முன் வைக்கப்படிருக்கிறது. -தி.சு.நடராசனின்  முன்னுரையிலிருந்து ரூ.300/-