சார்லஸ் டார்வின்(நாடகம்)

ஆயிஷா இரா.நடராசன் “மனிதன் கடவுளின் சிருஷ்டி என்பர் பலர்.ஆனால் பல அறிஞர்கள் இயற்கைச் சக்திகளின் வளர்ச்சிதான் மனித உருவம் என்றும் இதில் கடவுளின் கைவேலை ஒன்றும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் சார்லஸ் ராபர்ட் டார்வின் என்பார்-தான் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன் வைத்து இப்பரப்பில் நிலவி வந்த யூகங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார்.பாதிரியாருக்குப் படித்து தேவ ஊழியம் செய்யப் போயிருக்க வேண¢டிய டார்வின் பூச்சியினங்களின் ஆராய்ச்சிக்காக பீகிள் என்ற கப்பலேறி ஐந்தாண்டுகள் பயணம் செய்து தென் அமெரிக்காவின் பல பாகங்க்ளுக்கும் சென்று பரிணாம வளர்ச்சி விதிகளோடு திரும்பினார்.டார்வின் பிறந்து வளர்ந்து உருவான கதையை தமிழ் வாசகர்களுக்குச் சொல்லும் முயற்சியாக இந்நூல் வந்துள்ளது. 1809ஆம் ஆண்டு பிறந்து1882ஆம் ஆண்டு மறைந்த அவருடைய பால்ய காலம் திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் இந்நூல் சொன்னாலும் “ டார்வினை அவருடைய அறிவுக்காகவோ பொறுமைக்காகவோ விடாமுயற்சிக்காகவோ உலகம் போற்றவில்லை.மனித எண்ணத்திலே ஒரு புரட்சியை உண்டுபண்னி விட்டார்.அதனாலேயே உலகத்தாரின் மனதில் சாசுவதமான இடத்தைப் பெற்று விட்டார்“ என்று பொருத்தமான வர¤களுடன் புத்தகம் முடிகிறது.குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண¢டிய புத்தகம். “ ரூ.25/-

அணு ஆற்றல்

ப.கு.ராஜன் அணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல். ரூ.30/-

விண்வெளிக்கு ஒரு புறவழிச் சாலை

ஆயிஷா இரா.நடராசன் அறிவியல் கதைகள் மற்ற கோள்கள்,உலகங்கள் பற்றிப் பேசுகின்றன.சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன.ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலில் கதைகள் தான்.விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது.இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி விட்டன. ரூ.40/-

அறிவியல் களஞ்சியம்365-365

ஆத்மா கே.ரவி “நாம் அன்றாடம் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம்.உதாரணமாக செல்போன்,டி.வி,கல்மாரிமழை என்று தொடர்ந்து சொல்லலாம்.இந்த அறிவியல் உபகரணங்கள் எப்படி செயல்படுகின்றன என்று ஒருநாளைக்கு ஒரு தகவல் அறிந்துகொள்ளும் முயற்சியில் எளிய முறையுடன்365படங்களுடன் விளக்குகிறது இந்நூல்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலதரப்பினருக்கும் உதவிடும் நூல்.” ரூ.240/-

பிவிசி பாட்டில்களிலிருந்து100செய்முறைகள்

ஆத்மா கே.ரவி “பழைய பயன்படாத பிவிசி பாட்டில்களைத் தூக்கி எறியாமல் பயன்படத்தக்க வகையில் மாற்றியமைக்க100எளிய செயல்முறைகளை இந்நூலில் விளக்கியுள்ளார்.” ரூ.60/-

தேனியில் நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்

த.வி.வெங்கடேஸ்வரன் இந்திய நியூட்ரினோ நோக்குக்கூடம் திட்டத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை எளிய அறிவியல் மொழிகள் விளக்குகிறது இந்நூல். ரூ.75/-

எளிய10இயற்பியல் சோதனைகள்

ஆயிஷா இரா.நடராசன் கவனி சோதனை செய் விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள். ரூ.20/-

எளிய10வேதியியல் சோதனைகள்

ஆயிஷா இரா.நடராசன் கேள்வியும் பதில்களுமாய் விரியும் இப்புத்தகத்தில் வேதியியல் சம்மந்தப்பட்ட சோதனைகள் மிக எளிமையாய் பகுவாகியிருக்கிறது. ரூ.20/-