26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்

ஆசிரியர்: இந்திரா காந்தி 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1992 பாம்பே கலவரத்திருந்து, 1993 தொடர் குண்டு வெடிப்புகள், 2002 குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஆபத்தான நிகழ்வுகள் என கடந்த பதினாறு வருடங்களாக ரத்த காடாக உள்ளது இந்தியா… ரூ.65/-

பண்பாட்டு அசைவுகள்

தொ.பரமசிவன். தமிழ் சமூகச் சூழலை வரலாற்றுப் பின்னணியுடன் ஆராய்ந்து சொல்லும் மிகச் சில ஆய்வாளர்களில் ஒருவர். தமிழ் தேசியம், திராவிட ஆய்வுகளில் இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் அசாதாரணமானவை. இயல் விருது பெற்றவர்.   ரூ. 200/-

வனம் எழுதும் வரலாறு

சத்நாம் தமிழில்: பிரசன்னா பஸ்தர் காடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் அன்றாட வாழ்க்கையையும், அந்தக் காடுகளினூடே நான் பயணிக்கும்போது கண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் இந்நூல் விவரிக்கின்றது. ரூ.130/-

பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜான் பெர்க்கின்ஸ் தமிழில்:  போப்பு “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”, ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது. ரூ.200/-

பெரியார் : ஆகஸ்ட் 15

பெரியாரின் – பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் ‘இந்திய விடுதலை இயக்க’த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையமையாததொரு நூல். ரூ.450/-

இந்தியாவில் சாதிகள்

டாக்டர் அம்பேத்கர் உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. ரூ. 100.00

அம்பேத்கர்

ஏ.எஸ்.கே டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். ரூ.100/-

அமெர்த்தியா சென்

ஆசிரியர்: ரிச்சா சக்சேனா அமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்து விட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியிறுத்தும் அந்த மனிதர் அதற்க்கும் மேலே நோபல் குறித்து அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் ஆவர். எல்லையற்ற அறிவு காரணமாக அமர்த்தியாவிற்கு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி,கவுரவிப்புகள் அவருடைய அறிவைப போலவே அவர் கொண்ட அன்பும், இறக்கமும் எல்லையற்றவையாம். ரூ.100/-